ADDED : டிச 07, 2024 06:49 AM
அ நிறம் | அளவு
திருப்பூர்; 'நடப்பு வாரம் சனி மற்றும் ஞாயிறு வார விடுமுறையை முன்னிட்டு, இன்றும், நாளையும், 60 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்,' என, போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
திருப்பூரில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகள் வசதிக்காக, வாரத்தின், சனி, ஞாயிறு இரண்டு நாட்களும் வழக்கத்தை விட கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. நடப்பு வாரம் இன்றும், நாளையும், 60 சிறப்பு பஸ்கள் இயங்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவில்வழி பஸ் ஸ்டாண்டில் இருந்து30 பஸ்களும், புதிய பஸ் ஸ்டாண்ட், மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து தலா, 15 பஸ்களும் என, மொத்தம், 60சிறப்பு பஸ்கள் இயங்கும் என, திருப்பூர் போக்குவரத்து கழக மண்டல அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
