/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கூட்டுறவு மருந்தகங்களால் 6,081 பேர் பயன்
/
கூட்டுறவு மருந்தகங்களால் 6,081 பேர் பயன்
ADDED : ஏப் 24, 2025 10:26 PM
உடுமலை, ; திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, கூட்டுறவு மருந்தகங்களால், 6,081 பேர் மருந்து, மாத்திரை வாங்கி பயனடைந்துள்ளனர்.
தமிழக அரசு சார்பில், ஆயிரம் இடங்களில், முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளன. திருப்பூர் மாவட்டத்தில், 17 இடங்களில் மருந்தகம் திறக்கப்பட்டுள்ளன. திறக்கப்பட்ட நாளில் இருந்து, இதுவரை, 6,081 பேர், மருந்து, மாத்திரை வாங்கி பயனடைந்துள்ளனர். பழங்கரை, சோமவாரப்பட்டி, முத்துார், ருத்திராபாளையம், வெள்ளகோவில், தளி, ஊத்துக்குளி, அவிநாசி, சின்னவீரன்பட்டி, கரடிவாவி, மங்கலம், சிவன்மலை, பெருமாநல்லுார் ஆகிய, 14 கூட்டுறவு சங்கங்களில், முதல்வரின் மருந்தகம் இயங்கி வருகிறது. அத்துடன், தொழில் முனைவோரால், நான்கு இடங்களில் முதல்வர் மருந்தகம் நடத்தப்படுகிறது.
முதல்வர் மருந்தகங்களில், (ஜெனிரிக்) பிராண்டு, சித்தா மற்றும் ஆயுர்வேதா மருந்து, மாத்திரைகள், 25 முதல், 90 சதவீதம் வரையிலான தள்ளுபடி விலையில் வழங்கப்படுகிறது. பொதுமக்கள், இம்மருந்தகங்களை பயன்படுத்தி பயன்பெறலாம் என, மாவட்ட நிர்வாகம்அறிவித்துள்ளது.