/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரத்த தானம் முகாமில் 62 யூனிட் சேகரிப்பு
/
ரத்த தானம் முகாமில் 62 யூனிட் சேகரிப்பு
ADDED : பிப் 16, 2025 02:40 AM

அவிநாசி: ரோட்டரி திருப்பூர் ஆனந்தம் சார்பில் ரோட்டரி ஐ.எம்.ஏ., ரத்த வங்கி மற்றும் ஜீல் குழும நிறுவனங்கள் இணைந்து, கோழிப்பண்ணை பஸ் ஸ்டாப்பில் உள்ள ஜூல் குழும நிறுவன வளாகத்தில் ரத்த தான முகாமை நடத்தின.
இதில், ஜீல் குழுமத்தில் பணியாற்றும் அலுவலர்கள், ஊழியர்கள், ரோட்டரி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர், ரத்தக் கொடையாளர்களிடமிருந்து, 62 யூனிட்கள் ரத்தம் தானமாக பெறப்பட்டது. ரத்த தான முகாமுக்கு, மாநகராட்சி கமிஷனர் ராமமூர்த்தி, கமலபாஸ்கர், கணேஷ்மூர்த்தி சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.
ஐ.எம்.ஏ., ரத்த வங்கி தலைவர் அனந்தராம், மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் ரவிச்சந்திரன், கோவிந்தன், ரோட்டரி உதவி கவர்னர் ஹரி சங்கர், ரோட்டரி திருப்பூர் ஆனந்தம் தலைவர் உமாகாந்த், செயலாளர் பாஸ்கரன், பொருளாளர் முருகானந்தம் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.