/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பிளஸ் 1 மொழித்தேர்வில் 655 பேர் 'ஆப்சென்ட்'
/
பிளஸ் 1 மொழித்தேர்வில் 655 பேர் 'ஆப்சென்ட்'
ADDED : மார் 12, 2024 01:35 AM
திருப்பூர்:கடந்த 4ம் தேதி பிளஸ் 1 பொதுத்தேர்வு துவங்கியது. தமிழ் தேர்வெழுத, 25 ஆயிரத்து, 893 பேர் விண்ணப்பித்த நிலையில், 249 பேர் தேர்வெழுத வரவில்லை; 25 ஆயிரத்து, 633 பேர் தேர்வெழுதினர். விண்ணப்பித்த, 282 தனித்தேர்வர்களில், 70 பேர் தேர்வுக்கு வரவில்லை; 212 பேர் தேர்வெழுதினர்.
ஆங்கில தேர்வை, 26 ஆயிரத்து, 409 பேர் எழுத வேண்டும். தேர்வுக்கு, 245 பேர் வரவில்லை. விண்ணப்பித்த தனித்தேர்வர்களில், 91 பேர் தேர்வறைக்கு வரவில்லை. 240 பேர் தேர்வெழுதினர். தனித்தேர்வர்களுடன் சேர்த்து, தமிழ் தேர்வை, 336 பேரும், ஆங்கில தேர்வை, 319 பேரும் என மொத்தம், 655 பேர் எழுதவில்லை. ஆங்கில தேர்வில் பங்கேற்காதவர்களை விட, தமிழ் தேர்வுக்கு வராதவர்களே (336) அதிகமாக உள்ளனர்.
கடந்த, 7ம் தேதியுடன் மொழித்தாள் தேர்வுகள் முடிந்த நிலையில், இன்று முதல் முக்கிய தேர்வுகள் துவங்குகிறது. இன்று இயற்பியல் மற்றும் பொருளியல் தேர்வு நடக்கிறது. தமிழ் தேர்வில் ஒரு மதிப்பெண் வினா கஷ்டமாக இருந்தது. ஆங்கில தேர்வு எளிமையாக இருந்தது.

