/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'சில்மிஷ' பாதிரியாருக்கு '7 ஆண்டு'
/
'சில்மிஷ' பாதிரியாருக்கு '7 ஆண்டு'
ADDED : செப் 10, 2025 03:27 AM

திருப்பூர்:திருப்பூரில் 8 வயது சிறுமியிடம் அத்துமீறிய பாதிரியாருக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி பல்லகவுண்டம் பாளையம் அடுத்த கூனம்பட்டிப் புதுாரில், ஆதரவற்றோர் இல்லம், சர்ச் நடத்தி வந்தவர் ஆன்ட்ரூஸ், 48.
கடந்த, 2022 டிசம்பரில் அங்குள்ள, 8 வயது சிறுமியிடம் பாலியல் ரீதியாக அவர் அத்துமீறி நடந்துள்ளார்.
கடந்த, 2023 ஜனவரியில் அச்சிறுமி இது குறித்து, தன் தாயிடம் தெரிவித்தார். அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய், ஊத்துக்குளி போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் போக்சோ வழக்கில் ஆன்ட்ரூஸை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு, திருப்பூர் மகிளா கோர்ட்டில் நீதிபதி கோகிலா முன்னிலையில் நடந்தது.
ஆன்ட்ரூஸுக்கு, ஏழு ஆண்டு கடுங் காவல் சிறை, 10,000 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி நேற்று உத்தரவிட்டார்.