ADDED : டிச 09, 2024 04:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புயல் ஓய்ந்து வானிலை இயல்புக்கு திரும்பியதால், தென்னம்பாளையம் மீன் மார்க்கெட்டுக்கு நேற்று, 70 டன் மீன்கள் விற்பனைக்கு வந்தன. பெரும்பாலான மீன்களின் விலை குறைந்தது. மத்தி கிலோ, 100 - 130 ரூபாய், வஞ்சிரம், 550 - 650, வாவல், 250, சங்கரா, 150,
பாறை, 120 - 160, நண்டு, 350 - 450, படையப்பா, 250 ரூபாய்க்கு விற்கப்பட்டது. மீன் வாங்க வாடிக்கையாளர்கள் குவிந்தனர். மொத்த வியாபாரிகள் அதிகாலையிலேயே மீன்களை அதிகமாக வாங்கிச் சென்றனர். மதியத்துக்கு முன்பு, மீன்கள் விற்றுத்தீர்ந்தன.