/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஒரே நாளில் திருப்பூர் திரும்பிய மக்கள் 70 ஆயிரம் பேர்; பொங்கல் சிறப்பு பஸ்கள் 'ஹவுஸ்புல்'
/
ஒரே நாளில் திருப்பூர் திரும்பிய மக்கள் 70 ஆயிரம் பேர்; பொங்கல் சிறப்பு பஸ்கள் 'ஹவுஸ்புல்'
ஒரே நாளில் திருப்பூர் திரும்பிய மக்கள் 70 ஆயிரம் பேர்; பொங்கல் சிறப்பு பஸ்கள் 'ஹவுஸ்புல்'
ஒரே நாளில் திருப்பூர் திரும்பிய மக்கள் 70 ஆயிரம் பேர்; பொங்கல் சிறப்பு பஸ்கள் 'ஹவுஸ்புல்'
UPDATED : ஜன 20, 2026 07:17 AM
ADDED : ஜன 20, 2026 06:50 AM

திருப்பூர்: பொங்கல் விடுமுறை முடிந்து திருப்பூருக்கு ஒ ரே நாளில் 70 ஆயிரம் பேர் திரும்பினர். நேற்று முன்தினம் மாலை துவங்கி நள்ளிரவு தாண்டியும் சிறப்பு பஸ்கள் பயணியரை நிரப்பியபடி திருப்பூர் வந்தன.
பொங்கல் பண்டிகை முடிந்து, திருப்பூர் திரும்புவோர் வசதிக்காக, 17ம் தேதி முதல் போக்குவரத்து கழகம் பஸ் இயக்கியது. சனிக்கிழமை கூட்டமில்லாத நிலையில், நேற்று முன்தினம் காலையும் கூட்டமில்லை. மதியத்துக்கு பின் அதிகரித்த கூட்டம் மாலையில் அதிகமானது. மத்திய பஸ் ஸ்டாண்ட், கோவில்வழி பஸ் ஸ்டாண்டில் எங்கு திரும்பினாலும் குடும்பத்துடன் பயணிகள் தென்பட்டனர்.
காலை திருப்பூரில் இருந்து தென்மாவட்டத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட பஸ்கள், 80 - 120 பயணிகள் அழைத்துக் கொண்டு திரும்பின. திருப்பூர் வந்து சேர்ந்த பஸ்களில் நிறைந்த கூட்டம், திருப்பூரில் இருந்து கிளம்ப தயாரான பஸ்களில் இல்லை. நான்கு நாட்களாக வெறிச்சோடியிருந்த பஸ் ஸ்டாண்ட், கடைவீதிகள் நேற்று பரபரப்பாக மாறியது. டூவீலர், கார்களில் பலர் நகருக்குள் நுழைந்ததால், நெரிசல் கூடுதலானது.
பொங்கல் பண்டிகை முதல் நாள் கூட பஸ் ஸ்டாண்டில் இவ்வளவு கூட்டமில்லை. நேற்று முன்தினம் மாலை துவங்கி நள்ளிரவு வரை அடுத்தடுத்து பஸ்களில் பயணிகள் வந்திறங்கி கொண்டே இருக்க, அவர்களை வெளியே அனுப்பி வைக்க முடியாமல், போக்குவரத்து கழக அதிகாரிகள், போலீசார் திணறினர். எங்கு திரும்பினாலும், பைகளுடன் பயணிகள் காணப்பட்டனர்.
வழக்கமாக இரவு, 9:00 மணிக்கு பின் டவுன் பஸ், மினி பஸ்களில் கூட்டம் குறைந்து விடும். சொற்ப பயணிகளுடன் பஸ்கள் பஸ் ஸ்டாண்டில் இருந்து புறப்படும். நேற்றிரவு திருப்பூருக்கு வந்த காரணத்தால், டவுன் பஸ்களும் நிரம்பி வழிந்தது.
நள்ளிரவு, அதிகாலை திருப்பூர் வந்த பஸ்சில் பலர் வந்திறங்கி, பஸ் ஸ்டாப்பில் காத்திருந்து, இரவு 12:00 மணிக்கு மேல் ஆட்டோ, கால்டாக்சி பிடித்து வீடுகளுக்கு சென்றனர். மாலை 5:00 மணிக்கு பின் துவங்கிய நெரிசல், அதிகாலை 2:00 மணி வரை நீடித்தது. நாகர்கோவில், மதுரை, சென்னையில் இருந்து வந்தவர்களால், ஒரே நேரத்தில், ஆயிரக்கணக்கான பயணிகள் திரண்டடதால், பஸ் ஸ்டாண்டில் எங்கு பார்த்தாலும், மக்கள் தலைகளே தென்பட்டன.
கூடுதல் பஸ் இயக்கம் பயணிகள் வருகை அதிகரிக்கும் என்பதை எதிர்பார்த்து, மதுரை, தேனி, திருச்சி, சேலம் உள்ளிட்ட பகுதிக்கு, 300 பஸ்களை இயக்கினோம். மாலை, 5:00 மணிக்கு பின், திடீரென அதிகரித்த பயணிகள் எண்ணிக்கை, இரவு வரை தொடர்ந்தது. நேற்று ஒரே நேரத்தில், பெரும்பாலான பயணிகள் திருப்பூர் திரும்பியதால், கூட்டம் அதிகரித்தது. நான்கு நாளில், 1.20 லட்சம் பயணிகள் சென்ற நிலையில், ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில், 70 ஆயிரம் பேர் திரும்பினர். பயணிகள் கூட்டத்தை சமாளிக்க போதிய அளவில் பஸ்களை இயக்கப்பட்டது.
- சேதுபதி
அரசு போக்குவரத்து கழக திருப்பூர் மண்டல மேலாளர் (வணிகம்)

