ADDED : மே 21, 2026 08:53 AM
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக, வி.கே. அய்யங்காளிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில், 72 பேர் தேர்ச்சி பெறவில்லை.
இப்பள்ளியில், 180 மாணவர், 211 மாணவியர் என, 391 பேர் தேர்வெழுதினர். மாணவர்களில், 37 பேரும், மாணவியரில், 35 பேரும் என, மொத்தம், 72 பேர் தேர்ச்சி பெறவில்லை.
தேர்வெழுதியவர்களில், 319 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர் தேர்ச்சி சதவீதம், 79.44. மாணவியர் தேர்ச்சி சதவீதம், 83.41. மொத்த தேர்ச்சி சதவீதம், 81.59.
கடந்த முறை இப்பள்ளியில், 205 மாணவர், 217 மாணவியர் என, 422 பேர் தேர்வெழுதினர். மாணவர்களில், 49 பேரும், மாணவியரில், 29 பேரும் என, 78 பேர் தேர்ச்சி பெறவில்லை. மாணவர் தேர்ச்சி சதவீதம், 76.10. மாணவியர் தேர்ச்சி சதவீதம், 86.64. மொத்த தேர்ச்சி சதவீதம், 81.52. முந்தைய ஆண்டை விட, ஆறு பேர் குறைந்து, நடப்பு ஆண்டு, 72 பேர் தேர்ச்சி பெறாதது குறிப்பிடத்தக்கது.
