/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சுப்பையா சென்ட்ரல் பள்ளியில் 7ம் ஆண்டு விளையாட்டு விழா
/
சுப்பையா சென்ட்ரல் பள்ளியில் 7ம் ஆண்டு விளையாட்டு விழா
சுப்பையா சென்ட்ரல் பள்ளியில் 7ம் ஆண்டு விளையாட்டு விழா
சுப்பையா சென்ட்ரல் பள்ளியில் 7ம் ஆண்டு விளையாட்டு விழா
ADDED : செப் 02, 2025 11:08 PM

திருப்பூர்; திருப்பூர், கல்லுாரி சாலையில் அமைந்துள்ள சுப்பையா சென்ட்ரல் பள்ளியில் ஆண்டு விளையாட்டு தின விழா கொண்டாடப்பட்டது.
விழாவில், சிறப்பு விருந்தினர்களாக பள்ளியின் நிர்வாக அறங்காவலர் விஜயலட்சுமி, பல் மருத்துவர் ஷாலினி, மனநல மருத்துவர் ஷர்நிதா பங்கேற்றனர். விழாவில், பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு வெற்றிக் கோப்பைகளும் விருதுகளும் வழங்கப்பட்டன. விழாவில், பெற்றோர்களும் பங்கேற்கும் வகையில் போட்டிகள் நடைபெற்றது. முன்னதாக பள்ளி முதல்வர் வரவேற்றார். பள்ளியின் தாளாளர் சிறப்புரையாற்றினார். மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் அனைவரையும் கவர்ந்தது.