/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
8 லட்சம் கார்டு! ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல்
/
8 லட்சம் கார்டு! ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல்
8 லட்சம் கார்டு! ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல்
8 லட்சம் கார்டு! ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல்
ADDED : ஜன 09, 2026 06:07 AM

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்திலுள்ள 1,135 ரேஷன் கடைகளிலும், மூவாயிரம் ரூபாய் ரொக்கத்துடன் பரிசு தொகுப்பு வழங்கல், நேற்று முதல் துவங்கியுள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அனைத்து ரேஷன் கடைகளிலும் நேற்றுமுதல், இந்தாண்டுக்கான பரிசு தொகுப்பு வழங்கல் துவக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தின் ஒன்பது தாலுாகளில், மொத்தம் 1,135 ரேஷன் கடைகள் உள்ளன. 8 லட்சத்து 1,879 அரிசி கார்டுதாரர், 322 இலங்கை தமிழர் கார்டு என, 8 லட்சத்து 2 ஆயிரத்து 201 கார்டுதாரர்கள், பரிசு தொகுப்பு பெறும் பயனாளிகள் பட்டியலில் உள்ளனர்.
இவர்களுக்கு, பரிசு தொகுப்பு வழங்கப்படும் நாள், நேரம் விவரங்கள் அச்சிடப்பட்ட டோக்கன் வழங்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின், சென்னை - ஆலந்துாரில், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கலை துவக்கிவைத்தார். இதையடுத்து, மாநிலம் மழுவதும் உள்ள ரேஷன் கடைகளில், வினியோகம் துவங்கியது. திருப்பூரில், குப்பாண்டம்பாளையம் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில், கலெக்டர் மனிஷ் நாரணவரே தலைமையில் விழா நடைபெற்றது.
அமைச்சர் சாமிநாதன், துவக்கிவைத்தார். கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிபாளர் பிரபு, ஆர்.டி.ஓ. சிவப்பிரகாஷ் உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.
மாவட்டத்தில், 8 லட்சத்து 2 ஆயிரத்து 201 கார்டுதாரர்களுக்கு வழங்குவதற்காக, 802 டன் பச்சரிசி; 802 டன் சர்க்கரை ஒதுக்கப்பட்டுள்ளது. 3.04 கோடி மதிப்பில், கரும்பு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 3 ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்க, 240.66 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆதார் சரிபார்ப்பில் சிக்கல்
ரேஷன் கடைகளில், பாய்ன்ட் ஆப் சேல் கருவியில், கார்டுதாரரின் பயோமெட்ரிக் வைக்கப்பட்டு, ஆதார் சரிபார்ப்பு உறுதி செய்யப்பட்டபின்னரே, பொருட்கள் வழங்கப்படுகிறது. பரிசு தொகுப்புக்காக, மாநிலம் முழுவதும், ஒரே நேரத்தில் ஏராமானோரின் கைரேகை பதிவு செய்யப்பட்டதால், திருப்பூர் மாவட்டத்திலுள்ள பல ரேஷன் கடைகளில், நேற்று ஆதார் சரிபார்ப்பு மந்தமானது.
ஒரு நபருக்கு, ஒரு நிமிடத்தில் முடியவேண்டிய ஆதார் சரிபார்ப்பு, 10 முதல் 15 நிமிடங்கள் வரை காலதாமதம் ஏற்பட்டது. ஆதார் சரிபார்ப்பு செய்ய முடியாதபட்சத்தில், மாற்றுவழியில், கார்டுதாரர் விவரங்களை பதிவேட்டில் பதிவு செய்துவிட்டு, பரிசு தொகுப்பு வழங்குவது போன்ற எவ்வித மாற்று வழிகள் குறித்தும் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடவில்லை. இதனால், ரேஷன் கடை பணியாளர்கள் தவித்தனர்.
'வரிசையில் நீண்ட நேர காத்திருப்பு, நாளை வாங்கிக்கொள்ளுங்கள் என கூறியதால், சில கடைகளில் ரேஷன் பணியாளருக்கும் - பரிசு தொகுப்பு பெற வந்த மக்களுக்கும் இடையே வாக்குவாதங்களும் ஏற்பட்டன.

