/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கண்காட்சி, கலையரங்கு உள்பட 9 அரங்குகள்! வாகன பார்க்கிங் தளம், உணவுக்கூடங்களுடன் வசதிகள்: விரைவில் செயல்பாட்டுக்கு வருகிறது மாநாட்டு அரங்கம்
/
கண்காட்சி, கலையரங்கு உள்பட 9 அரங்குகள்! வாகன பார்க்கிங் தளம், உணவுக்கூடங்களுடன் வசதிகள்: விரைவில் செயல்பாட்டுக்கு வருகிறது மாநாட்டு அரங்கம்
கண்காட்சி, கலையரங்கு உள்பட 9 அரங்குகள்! வாகன பார்க்கிங் தளம், உணவுக்கூடங்களுடன் வசதிகள்: விரைவில் செயல்பாட்டுக்கு வருகிறது மாநாட்டு அரங்கம்
கண்காட்சி, கலையரங்கு உள்பட 9 அரங்குகள்! வாகன பார்க்கிங் தளம், உணவுக்கூடங்களுடன் வசதிகள்: விரைவில் செயல்பாட்டுக்கு வருகிறது மாநாட்டு அரங்கம்
UPDATED : பிப் 18, 2024 02:34 AM
ADDED : பிப் 17, 2024 11:49 PM

திருப்பூர் தொழில்துறை உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், மாநகராட்சி சார்பில் மாநாட்டு அரங்கம் கட்டி முடித்து திறப்பு விழா கண்டுள்ளது. விரைவில் இது பயன்பாட்டுக்கு விடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
திருப்பூர் மாநகராட்சி கடந்த 2015 - -18ம் ஆண்டில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டது. அதனடிப்படையில் மாநகராட்சி பகுதியில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து திட்டமிடப்பட்டது. மாநகராட்சி பகுதியில் மக்களின் தேவையையும், தொழில்துறை மற்றும் அமைப்புகளின் பயன்பாடுக்கு ஏற்ற வகையிலும், மாநாட்டு அரங்கம் அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்கு, குமரன் ரோட்டில், பயன்பாட்டில் இருந்து வந்த டவுன்ஹால் வளாகம் தேர்வு செய்யப்பட்டது.
அங்கு இரண்டே கால் ஏக்கர் பரப்பில் இந்த வளாகம், சுற்றிலும் திறந்தவெளி இடத்துடன் செயல்பட்டு வந்தது. முக்கிய அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டம்; அமைப்புகளின் நிகழ்ச்சிகள், பொருட்காட்சி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் இங்கு ஆண்டு முழுவதும் நடைபெற்று வந்தன.
இருப்பினும் மாறி வரும் வசதிகள், பெருகிவரும் தேவை, அதிகரித்து வரும் நிகழ்ச்சிகள் போன்றவற்றின் அடிப்படையில், புதிய பல்நோக்கு மாநாட்டு அரங்கம் அமைக்கும் திட்டம் உருவானது.
நாடகங்கள், கச்சேரிகள், சொற்பொழிவு, கருத்தரங்கம், பொது நிகழ்ச்சி, கண்காட்சி, பொருட்காட்சி, கூட்டம் போன்ற எண்ணற்ற நிகழ்ச்சி நடந்த இவ்வளாகம், முற்றிலும் அரசுத்துறை பயன்பாடுக்கு சென்றது.அதற்கு முன்னதாக வளாகம் பல லட்சம் ரூபாய் செலவில் புதுப்பித்து இருக்கைகள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டன.தேர்தலின் போது பயன்படுத்தப்படும் ஓட்டுப் பெட்டிகள் பாதுகாப்பாக கொண்டு சென்று வைக்கும் வகையில் இடையில் இதன் பயன்பாடு மாறியது. மாநாட்டு அரங்கம் கட்டும் திட்டம் துவங்கப்பட்ட நிலையில், ஓட்டுப் பெட்டிகள் இடமாற்றம் செய்யப்பட்டது. பின்னர், கட்டுமானப் பணி துவங்கும் விதமாக டவுன்ஹால் வளாகம் இடித்து அகற்றப்பட்டது.அதே வளாகத்தில் பல அடுக்கு வாகன பார்க்கிங் வளாகம் கட்டும் திட்டமும் மேற்கொள்ளப்பட்டதால், மாநாட்டு அரங்கம் 1.64 ஏக்கர் பரப்பில் முன்புறத்தில் கட்டும் பணி துவங்கி நடந்தது.
5 ஆண்டு காலம் நடந்த பணி
கடந்த 2019ம் ஆண்டில், இதன் கட்டுமானப் பணி துவங்கப்பட்டு தற்போது 2014ம் ஆண்டில் ஐந்தாண்டு காலத்துக்குப் பின் முடிவடைந்து தற்போது திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த வளாகம் 54 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. வளாகம் 34 ஆயிரம் சதுர அடி பரப்பில் கீழ் தளம் அமைந்துள்ளது. இந்த கீழ் தளம் வாகன பார்க்கிங் வளாகமாக இந்த மாநாட்டு அரங்கில் நடக்கும் நிகழ்வுக்கு வருவோர் பயன்படுத்தலாம்.இதில் ஒரே சமயத்தில், 135 எண்ணிக்கையிலான இரு சக்கர வாகனங்களும், 72 எண்ணிக்கையில் நான்கு சக்கர வாகனங்களும் நிறுத்த முடியும்.அடுத்ததாக உள்ள தரைத்தளம் 29,500 சதுர அடி பரப்பு கொண்டது. இதில் 8,633 சதுர அடி பரப்பில் கண்காட்சி அரங்கம்; 2,742 சதுர அடி பரப்பு டைனிங் ஹால், 4,000 சதுர அடி பரப்பில் வி.ஐ.பி.,கள் ஓய்விடம் அமைந்துள்ளது.அதே போல் முதல் தளம், 650 பார்வையாளர்கள் அமர வசதியாக 8,633 சதுர அடி பரப்பு கொண்ட அரங்கத்துடன் உள்ளது. இது தவிர, இருநுாறு பேர் பங்கேற்கும் விதமாக நிகழ்ச்சி நடத்தும் வகையில், தலா 2,943 சதுர அடி பரப்பு கொண்டு இரு கூட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், 100 பேர் அமரும் விதமாக 2,742 சதுர அடி பரப்பில் ஒரு அரங்கமும், 250 பேர் அமரும் விதமாக உணவுக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது.மேலும் இரண்டாவது தளம், 8,633 சதுர அடி பரப்பில், 500 பார்வையாளர்கள் அமரும் வகையிலான ஒரு அரங்கம்; தலா 200 பேருக்கான இரு அரங்கு, 200 பேர் அமரும் வகையிலான கலையரங்கம் மற்றும் இரு உணவுக் கூடங்களுடன் உள்ளது.
திருப்பூர் நகர மக்களின் தேவைக்கேற்ற வகையில் இந்த வளாகம் அமைந்துள்ளது. நகரின் மையப் பகுதி என்பதால் கூடுதல் சிறப்பு. விரைவில் பயன்பாட்டுக்கு வழங்கப்படும்.------
திருப்பூரில் திறக்கப்பட்டுள்ள மாநாட்டு அரங்கம்.
மாநாட்டு அரங்கில், மரத்தில் தேசத்தலைவர்கள் படங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
மாநாட்டு அரங்கில் இடம்பெற்றுள்ள, திருப்பூர் தொழில்துறையைக் குறிக்கும் வகையிலான மரச்சிற்பங்கள்.