sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

93 ஆயிரம் அரிசி கார்டுதாரர்கள் தகுதி: பொங்கல் பரிசு டோக்கன் தயார் 

/

93 ஆயிரம் அரிசி கார்டுதாரர்கள் தகுதி: பொங்கல் பரிசு டோக்கன் தயார் 

93 ஆயிரம் அரிசி கார்டுதாரர்கள் தகுதி: பொங்கல் பரிசு டோக்கன் தயார் 

93 ஆயிரம் அரிசி கார்டுதாரர்கள் தகுதி: பொங்கல் பரிசு டோக்கன் தயார் 


ADDED : ஜன 08, 2024 08:55 PM

Google News

ADDED : ஜன 08, 2024 08:55 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை:உடுமலை தாலுகாவில், 93,145 அரிசி கார்டு தாரர்கள், பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கம் பெறும் பயனாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

பொங்கல் பரிசு பெற, தகுதியானோர் யார் யாருக்கு தகுதி இல்லை என்கிற பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. பரிசு தொகுப்புக்கு தகுதியானோர் பட்டியல், அந்தந்த மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அவ்வகையில், திருப்பூர் மாவட்டத்தில், பயனாளிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளோருக்கு மட்டும், பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது.

எந்த நாளில், எந்த நேரத்தில் பரிசு தொகுப்பு பெற வேண்டும் என்கிற விபரங்கள் அச்சிடப்பட்ட டோக்கனை, ரேஷன் பணியாளர்கள் வீடு வீடாகச்சென்று வழங்கி வருகின்றனர்.

டோக்கன் வழங்கப்பட்ட பயனாளிகளுக்கு, வரும் 10ம் தேதி முதல் ரேஷன் கடைகளில், பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கம் வினியோகம் துவங்குகிறது.

பரிசு தொகுப்பு வழங்குவதற்காக, 663 டன் பச்சரிசி; 663 டன் சர்க்கரை ஒதுக்கீடு செய்யப்பட்டு, அந்தந்த ரேஷன் கடை களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இன்று வரை டோக்கன் வழங்கப்படும். டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில், ரேஷன் கடைக்குச்சென்று, பொங்கல் பரிசு தொகுப்பு பெற்றுக்கொள்ளலாம். டோக்கன் பெறுவதற்காக, கார்டுதாரர்கள் யாரும் ரேஷன் கடைக்கு செல்ல வேண்டாம்.

பொங்கல் பரிசு தொகுப்பு குறித்த புகார்களை, 0421 2218455 என்கிற எண்ணில் மாவட்ட கட்டுப்பாட்டு அறை மற்றும் 1077 என்கிற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

மாநில அளவில் புகார்களை, 1967,1800 4255901 என்கிற இலவச எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என, என்று கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

உடுமலை தாலுகாவில் ஒரு லட்சத்து, 8 ஆயிரத்து, 774 அரிசி கார்டுதாரர்கள் உள்ளனர். அதில், 15,629 கார்டுகள், பொங்கல் பரிசு பெற தகுதியற்றதாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, 93,145 அரிசி கார்டுதாரர்கள், பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கம் பெறும் பயனாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us