/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரவுடிக்கு சரமாரி அரிவாள் வெட்டு; 7 பேரை கைது செய்த போலீசார்
/
ரவுடிக்கு சரமாரி அரிவாள் வெட்டு; 7 பேரை கைது செய்த போலீசார்
ரவுடிக்கு சரமாரி அரிவாள் வெட்டு; 7 பேரை கைது செய்த போலீசார்
ரவுடிக்கு சரமாரி அரிவாள் வெட்டு; 7 பேரை கைது செய்த போலீசார்
ADDED : டிச 03, 2024 11:48 PM
திருப்பூர்; திருப்பூரில் ரவுடிக்கு நடந்த அரிவாள் வெட்டு தொடர்பாக, ஏழு பேரை போலீசார் கைது செய்தனர்.
தேனி மாவட்டம், மஞ்சலாறை சேர்ந்தவர் ராஜேஷ், 38; ரவுடி. இவர் மீது பல்வேறு கொலை வழக்கு உள்ளது. 2023ல் நடந்த கொலை வழக்கு தொடர்பாக ஆஜராக நேற்று முன்தினம் திருப்பூர் வந்தார். ஊத்துக்குளி ரோடு, பாளையக்காட்டில் இரவு, 7:15 மணியளவில் ராஜேஷ், சிலருடன் பேசி கொண்டிருந்தார். அவர்களிடையே தகராறு ஏற்பட்டது. ராஜேஷ் உடன் பேசி வந்த, அவரை சராமரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்றனர்.
தகவலறிந்து சென்ற போலீசார் அவரை மீட்டு, கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த கொலை முயற்சி தொடர்பாக, திருப்பூர் வடக்கு போலீசார் தனிப்படை அமைத்து விசாரித்தனர். போலீஸ் 'செக் போஸ்ட்' உஷார்படுத்தப்பட்டு, பல்லடம் ரோட்டில் காரில் தப்பிய கும்பலை இரவு பிடித்தனர்.
தங்களது நண்பனை கொன்ற ராஜேஷை பழிவாங்க திட்டமிட்டு, யார் பெரிய ரவுடி என்ற முன்விரோதம் இருந்து வந்தது. சமாதானம் பேச அழைத்து, அரிவாளால் வெட்டியது தெரிந்தது.
இதுதொடர்பாக, மூளையாக செயல்பட்ட 'நாய்' பாஸ்கர், 27, சக்தி சண்முகம், 21, பிரகாஷ்குமார், 28, பாண்டியராஜன், 29, தங்கபாண்டி, 23. பிரதீப், 31 மற்றும் கார் டிரைவர் மணி, 25 என, ஏழு பேரை போலீசார் கைது செய்தனர்.
பழி வாங்க திட்டம்
போலீசார் கூறியதாவது:
நல்லுாரை சேர்ந்த ரவுடி ஆட்டோ தினேஷ் மற்றும் வெட்டுப்பட்ட ராஜேஷ் கும்பலுக்குள் யார் பெரிய ரவுடி என்ற பிரச்னை இருந்து வந்தது. 2023ல், தினேஷை மது அருந்த அழைத்து, காட்டுப்பகுதியில் வைத்து அவரை ராஜேஷ் கும்பல் கொன்றது. பத்து பேரை கைது செய்தனர்.
அதிலிருந்து தினேஷின் நண்பரான நாய் பாஸ்கர், ராஜேஷ் இடையே முன்விரோதம் இருந்தது. இதனால், வெளியூரில் ராஜேஷ் தங்கியபடி, அவ்வப்போது மட்டும் திருப்பூர் வந்து சென்றார். தற்போது திருப்பூர் வந்த அவரை கொலை செய்ய திட்டமிட்டு, வெட்டி உள்ளனர். படுகாயத்துடன் ராஜேஷ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.