/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பாலாற்றை கடந்து செல்ல பாலம் தேவை; கிடப்பில் போடப்பட்ட கோரிக்கை
/
பாலாற்றை கடந்து செல்ல பாலம் தேவை; கிடப்பில் போடப்பட்ட கோரிக்கை
பாலாற்றை கடந்து செல்ல பாலம் தேவை; கிடப்பில் போடப்பட்ட கோரிக்கை
பாலாற்றை கடந்து செல்ல பாலம் தேவை; கிடப்பில் போடப்பட்ட கோரிக்கை
ADDED : ஆக 04, 2025 07:42 PM
உடுமலை; பாலாற்றின் குறுக்கே, தரை மட்ட பாலம் கூட இல்லாததால் பொன்னாலம்மன் சோலை சுற்றுப்பகுதி மக்கள் மழைக்காலங்களில், ஆற்றை கடக்க சிரமப்பட்டு வருகின்றனர்.
உடுமலை அருகே தளி பேரூராட்சிக்குட்பட்ட பகுதி பொன்னாலம்மன்சோலை. மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில், மேடும், பள்ளமுமான பகுதிகளில், பல ஆயிரம் ஏக்கரில், அப்பகுதியில், விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது; நுாற்றுக்கும் அதிகமான தோட்டத்துசாளைகளில் மக்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதி மக்கள், சாம்பல்மேடு, திருமூர்த்திநகர் வழியாக உடுமலைக்கு வருகின்றனர்; மற்றொரு வழித்தடமாக ஜிலோபநாயக்கன்பாளையம் வழியாக ஆனைமலை ரோடு வழியாகவும் பிற பகுதிகளுக்கு செல்கின்றனர்.
நீண்ட கால கோரிக்கை அடிப்படையில், சில ஆண்டுகளுக்கு முன் ரெட்டிபாளையம் பிரிவில் இருந்து, பொன்னாலம்மன்சோலைக்கு இணைப்பு ரோடு அமைக்கப்பட்டது.
சுமார், 7 கி.மீ.,க்கும் அதிகமான துாரம் அமைந்துள்ள இந்த ரோடு வழியாக, நுாற்றுக்கணக்கான வாகனங்கள் நாள்தோறும் வந்து செல்கின்றன.
விவசாய விளைபொருட்களான தேங்காய் இதர காய்கறிகளை சந்தைப்படுத்த, டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில், எடுத்துச்செல்கின்றனர்.இந்த ரோட்டில், பாலாறு குறுக்கிடுகிறது. ஆற்றை கடக்க அனைத்து வாகனங்களும் திணற வேண்டியுள்ளது.
இருபுறமும், மிக சரிவாக அமைந்துள்ளதால், இரு சக்கர வாகன ஓட்டுநர்களும் அவ்வழியாக வர முடியாமல், தவிக்கின்றனர்.
அப்பகுதி மக்கள் கூறியதாவது: பல்வேறு தேவைகளுக்காக எரிசனம்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல, ரெட்டிபாளையம் பிரிவு செல்லும் ரோடு உதவியாக உள்ளது. ஆனால், பாலாற்றை கடக்க எவ்வித வசதியும் இல்லை. தற்காலிக தீர்வாக, பாலாற்றை கடந்து செல்லும் வகையில், தரைமட்ட பாலம் அமைத்து தர வேண்டும்.
மழைக்காலங்களில் இவ்வழித்தடத்தில் போக்குவரத்து துண்டிக்கப்படுகிறது. இதனால், நுாற்றுக்கணக்கான விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பயன்பெறுவார்கள். இவ்வாறு, தெரிவித்தனர்.