/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நொறுங்கிய நிலையில் கார் என்.எச்., ரோட்டில் நெரிசல்
/
நொறுங்கிய நிலையில் கார் என்.எச்., ரோட்டில் நெரிசல்
நொறுங்கிய நிலையில் கார் என்.எச்., ரோட்டில் நெரிசல்
நொறுங்கிய நிலையில் கார் என்.எச்., ரோட்டில் நெரிசல்
ADDED : ஏப் 18, 2025 07:01 AM

பல்லடம்; வாகனப் போக்குவரத்து நிறைந்த பல்லடம் தேசிய நெடுஞ்சாலையில், விபத்துகள் ஏற்படாத நாளே இல்லை என்று கூறும் அளவுக்கு, தினசரி, வாகன விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. நான்கு வழிச்சாலையாக, ரோடு விரிவாக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து, வாகனங்கள் அசுர வேகத்தில் வந்து செல்வது விபத்துக்கு காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
அடிக்கடி ஏற்படும் வாகன விபத்துகளால், உயிர் சேதம், பொருட்சேதம் ஏற்படுகிறது. விபத்துக்குள்ளான கார் ஒன்று, முழுவதும் நொறுங்கிய நிலையில், நேற்று முன்தினம், நடுரோட்டில் நின்றிருந்தது. கோவை -- பல்லடம் நோக்கி வந்த வாகன ஓட்டிகள் பலரும், காரை அதிர்ச்சியுடன் பார்த்து சென்றனர். இதனால், தேசிய நெடுஞ்சாலையில் வந்த வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றன.
ரோட்டில் நின்றிருந்த கார், ஏற்கனவே விபத்துக்குள்ளானது என்பதும், ஆர்.டி.ஓ., ஆய்வுக்காக எடுத்துச்செல்லும் பணி நடந்து வந்ததும், சிறிது நேரத்துக்கு பின்னரே தெரியவந்தது. தொடர்ந்து, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், போலீசார், விபத்துக்குள்ளான காரை உடனடியாக அகற்றினர்.