ADDED : அக் 10, 2024 06:18 AM

அ நிறம் | அளவு
திருப்பூர் : பி.ஏ.பி., வாய்க்கால் வெட்டப்பட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டபோது, பொங்கலுார், பி.ஏ.பி., வாய்க்கால் அருகில் கல்வெட்டு ஒன்று வைக்கப்பட்டது. 1966ம் ஆண்டு வைக்கப்பட்ட கல்வெட்டு இன்றளவும் காரை பெயராமல் அப்படியே உள்ளது. ஆனால் அதன் முக்கியத்துவத்தை உணராத அதிகாரிகள் அதை உடைத்து பெயர்த்தெடுத்து ரோட்டோரம் போட்டு விட்டனர்.
பி.ஏ.பி., தின விழா கொண்டாடுவதற்காக அங்கு வந்த விவசாயிகள் அதை வேதனையுடன் பார்வையிட்டனர். அந்த கல்வெட்டை மீண்டும் அதே இடத்தில் நிறுவ வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பு.
