/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பூப்பறிக்க மாட்டுவண்டி பயணம் பாரம்பரியம் மாறாத பண்டிகை
/
பூப்பறிக்க மாட்டுவண்டி பயணம் பாரம்பரியம் மாறாத பண்டிகை
பூப்பறிக்க மாட்டுவண்டி பயணம் பாரம்பரியம் மாறாத பண்டிகை
பூப்பறிக்க மாட்டுவண்டி பயணம் பாரம்பரியம் மாறாத பண்டிகை
ADDED : ஜன 18, 2024 12:33 AM

பொங்கலுார் : பொங்கலுார் அருகேயுள்ள சின்னாரியபட்டியில், நேற்று காணும் பொங்கலை முன்னிட்டு காலையில் எழுந்ததும் வீடுகள் தோறும் பொங்கல் வைத்து கொண்டாடினார்.
அப்பகுதி பெண்கள், குழந்தைகள் உட்பட ஏராளமானோர் மாரியம்மன் கோவிலில் கும்மியாட்டம் ஆடினர். பின் அங்கிருந்து மாதவீஸ்வரர் கோவிலுக்கு தாங்கள் விரும்பிய தின்பண்டங்களை எடுத்துக்கொண்டு பூப்பறிக்க மாட்டுவண்டியில் ஊர்வலமாக சென்றனர். அங்கு சென்று தின்பண்டங்களை அனைவரும் பகிர்ந்து சாப்பிட்டனர்.
தொடர்ந்து கோவில் வளாகத்தில் சிறுவர் சிறுமிகளுக்கான லெமன் ஸ்பூன், பாட்டிலில் தண்ணீர் நிரப்புதல், கயிறு இழுத்தல், மியூசிகல் சேர் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.