/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பூபாளம் இசையில் களைகட்டும் கிறிஸ்துமஸ்
/
பூபாளம் இசையில் களைகட்டும் கிறிஸ்துமஸ்
ADDED : டிச 08, 2024 02:49 AM

கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்குகிறது. தேவாலயம், வீடுகளில் பண்டிகையை வரவேற்கும் விதமாக, 'ஸ்டார்' தொங்கவிடப்படும். தேவாலயங்களில் மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு, இரவில் அவை ஜொலிக்கும்.
கிறிஸ்தவ தேவாலயங்கள் சார்பில், வீடு, வீடாக சென்று பூபாளம் பாடி, ஏசு கிறிஸ்துவின் பிறப்பு வாழ்த்துகளை பகிர்ந்து கொள்வர்.தினந்தோறும் மாலை, ஒவ்வொரு பகுதியில் வசிக்கும் கிறிஸ்தவர்களின் வீடுகளுக்கு செல்லும் பூபாளக் குழுவினர், கிறிஸ்து பிறப்பின் பாடல் பாடுவர்.
கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்தவர்கள், கிறிஸ்துமஸ் பாடலுக்கு நடனமாடி, வீடுகளில் உள்ளவர்களுக்கு இனிப்பு வழங்குவார். அப்பகுதியில் உள்ள ஏதாவது ஒரு வீட்டில், இரவு உணவு ஏற்பாடு செய்யப்படும். பூபாளக்குழுவினர் உணவருந்தி, அந்நாளை நிறைவு செய்வர்.