/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தேங்கும் குப்பைகள் நாறும் நகரம்!
/
தேங்கும் குப்பைகள் நாறும் நகரம்!
ADDED : ஜூலை 25, 2025 11:34 PM

திருப்பூர்; திருப்பூர் மாநகராட்சி பகுதியில் உள்ள 60 வார்டுகளிலும் தினமும் சராசரியாக 800 மெட்ரிக் டன் அளவு குப்பைகள் சேகரமாகிறது.
அவை பாறைக்குழிகளில் கொட்டப்படுகிறது. அதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், கழிவுகள் அகற்றுவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் 3 நாட்களாக குப்பைக்கழிவுகள் தேங்கியுள்ளது. குடியிருப்புகளில் சேகரமாகும் கழிவுகள் துாய்மைப் பணி வாகனங்களில் கொண்டு சென்று ஒதுக்குப்புறமான இடங்களில் குவித்து வைக்கப்படுகிறது. மேலும், இக்கழிவுகள் சேகரிக்கப்படும் அதே வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டுமே தேக்கி வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாநகராட்சி தரப்பில் கூறுகையில், 'குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடம் ஒப்படைப்பு செய்வதில் நிர்வாக ரீதியான வழிமுறைகள் அரசு தரப்பில் நடந்து வருகிறது. விரைவில் இவை முடிவு எட்டப்படும். கழிவுகள் தேங்கும் பிரச்னைக்கு மிக விரைவில் தீர்வு காணப்படும்' என்று தெரிவிக்கப்பட்டது.
நா.த.க., மனு 'திருப்பூர் மாநகராட்சியில் குப்பை பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்' என, நாம் தமிழர் கட்சி வலியுறுத்தியுள்ளது.
நாம் தமிழர் தொழிற்சங்க பேரவை மாநில துணை செயலாளர் சுரேஷ்பாபு, திருப்பூர் மாநகராட்சி கமிஷனரிடம் வழங்கிய மனு:
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், 55 கோடி ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்ட, திருப்பூர் குமரன் சாலையில் உள்ள டவுன் ஹால் கட்டடத்தை, கடந்த, 2024 பிப்., 11ம் தேதி, துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்தார். 2,000 பேர் அமரும் வகையில் அரங்கம், கூட்ட அரங்கம், பொருட்காட்சி அரங்கம் மற்றும் வாகன பார்க்கிங் தளம் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன.
இருப்பினும், அந்த கட்டடம் இன்னும் பயன்பாட்டுக்கு திறந்துவிடப்படாமல் உள்ளது. இதனால், நிதியிழப்பு தான் ஏற்படுகிறது.திருப்பூர் மாநகராட்சியில் எங்கு நோக்கினும், குப்பை தேங்கி நிற்கிறது; சாலை, வீதிகளின் பல இடங்கள் குப்பைக்காடாக மாறியிருக்கிறது. மாநகராட்சி சாலைகள் தரமற்றும், குண்டும், குழியுமாகவும், வாகன விபத்து ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. எனவே, மாநகராட்சி நிர்வாகம் இவ்விவகாரத்தில் தலையிட்டு உரிய கவனம் செலுத்த வேண்டும்.