/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆபத்தை வரவழைக்கும் 'கேட் வால்வு '
/
ஆபத்தை வரவழைக்கும் 'கேட் வால்வு '
ADDED : அக் 01, 2025 12:00 AM

திருப்பூர்; காங்கயம் ரோட்டில் குடிநீர் குழாய் கேட் வால்வு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
திருப்பூர் - காங்கயம் ரோடு அதிக வாகனப் போக்குவரத்தும் மக்கள் நடமாட்டமும் நிறைந்த முக்கியமான ரோடு. இந்த ரோட்டில் பி.எஸ்.என்.எல்., வளாகத்துக்கு அடுத்த சின்னத் தோட்டம் பகுதிக்கு பிரிந்து செல்லும் இடத்தில், பிரதான ரோட்டில் குடிநீர் குழாய் இயக்கும் கேட் வால்வு பொருத்தப்பட்டுள்ளது.
ரோடு அகலப்படுத்திய நிலையில், ரோட்டோரமாக இருந்த கேட் வால்வு தற்போது ரோட்டின் ஒரு பகுதியாக மாறி விட்டது. நெடுஞ்சாலை ரோட்டில் இந்த கேட் வால்வின் மூடி பகுதி ஏறத்தாழ அரை அடி உயரத்துக்கும் மேல் ரோட்டின் மேற்பகுதியில் நீட்டியபடி உள்ளது.
வேகமாக வரும் வாகன ஓட்டிகளுக்கு இந்த இடத்தில் மேலே மூடி நீட்டிக்கொண்டிருப்பது தெரியாமல் அதன் மீது மோதி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. கேட் வால்வு பகுதியை முறையாக அமைத்து ரோடு மட்டத்தில் அதன் மூடியை மாற்றி அமைக்க வேண்டும்.