ADDED : செப் 19, 2025 08:15 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; உடுமலை பூலாங்கிணர் பஸ் ஸ்டாப்பில், மின்விளக்கு எரியாததால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.
உடுமலை - பொள்ளாச்சி ரோட்டில் பூலாங்கிணர் ஊராட்சிக்கான பஸ் ஸ்டாப் உள்ளது. உடுமலை -பொள்ளாச்சி வழித்தட பஸ்களை பயன்படுத்துவதற்கு பொதுமக்கள் இதை அதிகம் பயன்படுத்துகின்றனர்.
பூலாங்கிணர் பகுதியிலிருந்து மக்கள் உடுமலைக்கு பணிக்கு வந்து செல்கின்றனர். பலரும் பயன்படுத்தும் இந்த பஸ் ஸ்டாப்பில் தெருவிளக்கு எரியாமல் உள்ளது. மாலை முதல் அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்துவிடுகிறது.
இதனால் இரவு நேரங்களில் பஸ்சுக்கு காத்திருக்கும் பயணியர் அச்சத்துடன் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தெருவிளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.