/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருமூர்த்தி அணையில் இறந்து கிடந்த கடமான்
/
திருமூர்த்தி அணையில் இறந்து கிடந்த கடமான்
ADDED : மார் 18, 2025 04:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை: உடுமலை வனச்சரகம், திருமூர்த்தி அணைப்பகுதியில் கடமான் இறந்து கிடந்தது. இதையடுத்து ஜல்லிபட்டி, கால்நடை உதவி மருத்துவர் ராம்குமார், உடுமலை வனச்சரக அலுவலர் மணிகண்டன் மற்றும் வனப்பணியாளர்கள் முன்னிலையில், இறந்த ஆண் கடமானின் உடல் உடற்கூறாய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வில், இறந்த ஆண் கடமான் கால்தவறி காண்டூர் கால்வாய் பகுதியில் விழுந்ததில், அதன் உடலில் மேற்பகுதியில் காயங்கள் ஏற்பட்டதுடன், தண்ணீரில் அடித்து வரப்பட்டதால் தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என கண்டறியப்பட்டது.