/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தீவிரவாதிகளிடம் இருந்து ராணுவத்தினரை காத்த நாய்
/
தீவிரவாதிகளிடம் இருந்து ராணுவத்தினரை காத்த நாய்
ADDED : நவ 03, 2024 11:25 PM

கடந்த 2001ல் ராணுவத்தில் சேர்ந்து 2017-ல் ஓய்வுபெற்றேன். 60 ஆர்ஆர் பிரிவில் பணிபுரிந்தேன். பீரங்கிகளில் குண்டுகளைத் தொடர்ந்து 'லோடு' செய்யும் பணியை முதலில் செய்துவந்தேன். ஜம்முவில் பணிபுரிந்தபோது, ரஜோலி கிராமத்துக்கு தீவிரவாதிகள் நால்வர் வருவதாக தகவல் கிடைத்தது. அந்தப்பகுதியை காலையிலேயே பார்வையிட்டோம். அப்போது உணவு சாப்பிட்டோம். உணவை அங்கிருந்த நாய்க்கு அளித்தோம். அதைச் சாப்பிட்ட நாய், எங்களுடனேயே வந்துவிட்டது.
நாங்கள் வந்து சென்ற தகவல் தீவிரவாதிகளுக்கு முன்பே கிடைத்தது. நள்ளிரவில் கடக்க வேண்டியவர்கள், முன்பே அந்தப்பகுதியைக் கடந்துவிட்டனர். நள்ளிரவுக்கு முன்பே, அங்கு செல்வதற்காக நாங்களும் புறப்பட்டோம். எங்களைச் சுட்டுக்கொல்வதற்காக அவர்கள் தயாராக இருந்தனர். இது எங்களுக்குத் தெரியாது. அது முற்றிலும் இருள்சூழ்ந்த பகுதி.
நாங்கள் அப்பகுதிக்குச் சென்றடைவதற்கு முன்பே எங்களுடன் வந்த நாய் குரைத்தது. இதனால் சுதாரித்தோம். இரவு நேர தொலைநோக்கி மூலம், தீவிரவாதிகள் நடமாட்டத்தை அறிந்தோம். எங்களுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே சண்டை நடந்தது. தீவிரவாதிகள் தப்பிவிட்டனர். எங்கள் தரப்பிலும் எந்தச் சேதமும் இல்லை. நாய்தான் எங்களுடைய உயிரைக் காப்பாற்றியது எனலாம்.
தற்போது, பல்லடம் அருகே வடமலைப்பாளையம் வி.ஏ.ஓ.,வாகப் பணிபுரிகிறேன். ராணுவப்பணியில் ஈடுபட இளை ஞர்கள் முன்வர வேண்டும்.