/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பாலிதீன் கழிவுகளால் அடைபடும் வாய்க்கால்
/
பாலிதீன் கழிவுகளால் அடைபடும் வாய்க்கால்
ADDED : அக் 18, 2024 06:33 AM
திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில், 24,800 ஆயிரம் எக்டர் பரப்பில் நெல், 1.49 லட்சம் ஏக்கர் பரப்பளவில் தானியம், 49 ஆயிரம் எக்டர் பரப்பில் பல வகை பயறு வகை, 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நிலக்கடலை பயிரிடப்படுகிறது.
தற்போது, வடகிழக்குப் பருவமழை பரவலாக பெய்து வரும் நிலையில், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பல்வேறு இடங்களில் விதைப்பு, உரமிடுவது போன்ற பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். வேளாண், தோட்டக்கலைத் துறையினரும், மழைக்கால பயிர் சாகுபடி குறித்து ஆலோசனை வழங்கி வருகின்றனர்.
தேசிய விவசாயிகள் விழிப்புணர்வு இயக்கத்தின் மாநில தலைவர் பிரபுராஜா கூறியதாவது:
தற்போது பெய்து வரும் மழை விவசாயிகளுக்கு சாதகமானது தான். பெரும் மழை, புயல் சமயத்தில் தான் விளைநிலங்களில் பாதிப்பு ஏற்படும். இருப்பினும், இந்த மழையால் வெங்காயம், தக்காளி போன்ற அழுகும் பொருட்களுக்கு பிரச்னை ஏற்படும். தொடர்ந்து மழை பெய்தால், அவற்றை அறுவடை செய்வது, சந்தைக்கு கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்படும்.
கிராமப்புறங்களில் குளம், குட்டைகளை துார் வாரியிருந்தால் ஒரு சொட்டு மழைநீர் கூட வீணாகியிருக்காது. சுற்றியுள்ள விவசாய நிலங் களின் நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்திருக்கும்.
விவசாய நிலங்களையொட்டியுள்ள வடிகால்களில் வழிந்து வரும் வெள்ளத்தில், பெருமளவில் பாலிதீன் குப்பைகள் வருகின்றன; இவை விவசாய நிலத்துக்கு நேரடி பாதிப்பை ஏற்படுத்துகிறது; அவற்றால் வரப்பு, வாய்க்கால்களும் அடை படுகின்றன. எனவே, பாலிதீன் புழக்கத்தை கட்டுப்படுத்துவது அவசியம். இவ்வாறு, அவர் கூறினார்.