/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
காட்சிப்பொருளாக மாறிய குடிநீர் சுத்திகரிப்பு கருவி
/
காட்சிப்பொருளாக மாறிய குடிநீர் சுத்திகரிப்பு கருவி
காட்சிப்பொருளாக மாறிய குடிநீர் சுத்திகரிப்பு கருவி
காட்சிப்பொருளாக மாறிய குடிநீர் சுத்திகரிப்பு கருவி
ADDED : நவ 21, 2024 09:29 PM
உடுமலை; உடுமலை பஸ் ஸ்டாண்டில், குடிநீர் சுத்திகரிப்பு கருவி பராமரிப்பில்லாமல், வீணாகி வருகிறது.
உடுமலை பஸ் ஸ்டாண்டிற்கு, 300க்கும் மேற்பட்ட பஸ்களும், பல ஆயிரக்கணக்கான பயணியரும் வந்து செல்கின்றனர்.
பயணியர் குடிநீர் வசதிக்காக, நகராட்சி சார்பில், திருப்பூர் பஸ் நிற்கும் பகுதியில், குடிநீர் சுத்திகரிப்பு கருவி அமைக்கப்பட்டது. ஆனால், முறையாக அதனை பராமரிக்காததால், பழுதடைந்து காட்சிப்பொருளாக மாற்றப்பட்டுள்ளது.
இப்பகுதியில், குப்பை கொட்டப்பட்டும், எச்சில் துப்பும் இடமாக மாற்றப்பட்டு, துர்நாற்றம், சுகாதாரக்கேடு ஏற்படுத்தி வருகிறது.
பஸ் ஸ்டாண்டிற்கு வரும் பயணியர், குடிநீருக்கு அலையும் நிலை உள்ளது. மேலும், கழிப்பிடம், இருக்கை என அடிப்படை வசதிகளும் இல்லை. பஸ் ஸ்டாண்டில், பயணியருக்கு உரிய வசதிகள் செய்து தர வேண்டும்.