ADDED : பிப் 04, 2025 07:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லடம், வடுகபாளையம்புதுார் -- சித்தம்பலம் செல்லும் வழியில், நேற்று முன்தினம் இரவு, உயர் அழுத்த மின் கம்பி ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. ரோட்டில் விழுந்த பின்னும், தீ எரிந்து கருகியது. விரைந்து சென்ற போலீசார், தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு ஏற்படுத்தினர். மின்வாரிய ஊழியர்கள், மின் இணைப்பை துண்டித்து, சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர்.
இரவு நேரம் என்பதால், வாகன போக்குவரத்து இல்லை. ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் துரிதமாக செயல்பட்டு, அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. ஓவர் லோடு காரணமாக, மின் கம்பி தீப்பிடித்து எரிந்து விழுந்திருக்கலாம் என்று மின்வாரியத்தினர் தெரிவித்தனர்.

