/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'பல்லடத்தில் மேம்பாலம் அவசியம்'
/
'பல்லடத்தில் மேம்பாலம் அவசியம்'
ADDED : நவ 18, 2024 06:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லடத்தில், இந்திய கம்யூ., கட்சியின் பேரவை கூட்டம் நேற்று நடந்தது. ஒன்றிய செயலாளர் சாகுல் ஹமீது தலைமை வகித்தார். துணைச் செயலாளர் கணேசன், மாவட்ட குழு உறுப்பினர் நதியா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பல்லடத்தில் மேம்பாலம் அமைக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள மருத்துவப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். அறிவொளி நகரில், 25 ஆண்டு களாக பட்டா இன்றி வசித்து வரும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒன்றிய தலைவராக ஷாரீஷ், செயலாளர் புவனேஷ், பொருளாளராக லாட்சன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மருது நாயகம் நன்றி கூறினார்.