/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திறக்கப்படாமல் வீணாகும் நடை மேம்பாலம்: வீணாகும் அரசு நிதி
/
திறக்கப்படாமல் வீணாகும் நடை மேம்பாலம்: வீணாகும் அரசு நிதி
திறக்கப்படாமல் வீணாகும் நடை மேம்பாலம்: வீணாகும் அரசு நிதி
திறக்கப்படாமல் வீணாகும் நடை மேம்பாலம்: வீணாகும் அரசு நிதி
ADDED : அக் 30, 2025 11:00 PM
உடுமலை:  உடுமலையில், 5 ஆண்டாகியும், 'லிப்ட்' உடன் கூடிய நடை மேம்பாலம் திறக்கப்படாமல், அரசு நிதி வீணாகி வருவதோடு, பிரதான ரோட்டில் விபத்துக்களும் அதிகரித்து வருகிறது.
உடுமலை பஸ் ஸ்டாண்ட் அருகே, பொள்ளாச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. பஸ் ஸ்டாண்டிலிருந்து பொதுமக்கள், அரசு மருத்துவமனை, அரசு அலுவலகங்கள், தனியார் மருத்துவமனைகளுக்கு செல்ல ரோட்டை கடக்க வேண்டிய சூழல் உள்ளது.
நுாற்றுக்கணக்கான மக்கள் ரோட்டை கடக்கும் போது, வாகன போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்கள் ஏற்படுகிறது.
இதற்கு தீர்வு காணும் வகையில், 5 ஆண்டுக்கு முன், பஸ் ஸ்டாண்ட் அருகே, 1.5 கோடி ரூபாய் செலவில், 'லிப்ட்' உடன் கூடிய நடை மேம்பாலம் அமைக்கப்பட்டது.
ஆனால், மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல், வீணாக உள்ளது. பாலம் மற்றும் பாலத்திற்கு கீழ் வாகன ஆக்கிரமிப்புகள், போதை ஆசாமிகள் புகலிடமாக மாறியுள்ளது. பொதுமக்கள் வழக்கம் போல், ரோட்டை கடக்கும் போது, விபத்து, வாகன நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இந்த நடை மேம்பாலம், திறக்கப்படாமல் உள்ளதால், பொருத்தப்பட்ட லிப்ட், இயந்திரங்கள், மின் விளக்குகள் வீணாகிவருவதோடு, பராமரிப்பு இல்லாமல் பாலம் பழுதடைந்துள்ளது.
அரசு துறை அதிகாரிகள் ஒருங்கிணைப்பு இல்லாததால், அரசு நிதியும் வீணடிக்கப்பட்டுள்ளது.எனவே, இப்பாலத்தை திறக்க நகராட்சி மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

