/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கவிதை நுால் வெளியிட்ட முன்னாள் மாணவி
/
கவிதை நுால் வெளியிட்ட முன்னாள் மாணவி
ADDED : பிப் 03, 2024 11:44 PM

திருப்பூர் அருகே சாமளாபுரம் அய்யன்கோவில் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவி கலைச்செல்வி. தற்போது கோவையில் வசித்து வரும் அவர், கலைக்கண்ணன் என்ற பெயரில் கவிதை நுால் ஒன்றை எழுதியுள்ளார். 'குணாளனின் குந்தவை' என்ற தலைப்பிலான இந்த நுாலை தான் படித்த பள்ளியில் வெளியிட விரும்பினார்.
அவ்வகையில், இதன் வெளியீட்டு விழா, நேற்று பள்ளி வளாகத்தில் நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் செல்வகுமார் தலைமை வகித்தார். கவிதை நுாலினை புலவர் செந்தலை கவுதமன் வெளியிட, முன்னாள் தலைமையாசிரியர் அல்லி பெற்றுக் கொண்டார்.
பேரூராட்சி தலைவர் பழனிசாமி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரத்தினசபாபதி, ரஜினி பிரதாப், விஜி கல்யாணி உள்ளிட்டோர் பேசினர். முன்னாள் மாணவர் சங்க நிர்வாகி மோகன்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.