/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கலைத்திருவிழாவில் அமர்க்களம் 'கலக்கிய' மாணவியர் பட்டாளம்!
/
கலைத்திருவிழாவில் அமர்க்களம் 'கலக்கிய' மாணவியர் பட்டாளம்!
கலைத்திருவிழாவில் அமர்க்களம் 'கலக்கிய' மாணவியர் பட்டாளம்!
கலைத்திருவிழாவில் அமர்க்களம் 'கலக்கிய' மாணவியர் பட்டாளம்!
ADDED : ஜன 04, 2025 12:43 AM

திருப்பூர்; திருப்பூர் குமரன் கல்லுாரியில், மாணவியர் பள்ளிகளுக்கு இடையேயான கலைத்திருவிழா நேற்று நடந்தது.
கல்லுாரி முதல்வர் வசந்தி வரவேற்றார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் தனலட்சுமி குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தார். கல்லுாரி நிர்வாக அலுவலர் நிர்மல்ராஜ் முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற முதன்மை கல்வி அலுவலர் உதயகுமார் பேசியதாவது:
ஒவ்வொரு மாணவியருக்குள்ளும் ஒளிந்திருக்கும் திறமைகளை வெளிக்கொணர, அவர்களுக்கான வாய்ப்புகளை உருவாக்கித்தர போட்டிகள் நடத்தப்படுகிறது. தன்னம்பிக்கை வளர்க்கும் போட்டிகளில் தவறாமல் மாணவியர் பங்கேற்க வேண்டும்.
வரும் காலம் பொதுத்தேர்வுகளை எதிர்கொள்ள இருக்கும் காலம். எனவே, மொபைல் போனை ஓரமாக வைத்து விட்டு, படிப்பில் முழு கவனத்தையும் செலுத்துங்கள்; நல்ல மதிப்பெண் பெற முயற்சியுங்கள்.
கலை, அறிவியல் பிரிவில் நல்ல வாய்ப்புகளை தேட வேண்டும், நல்ல பாடப்பிரிவு கிடைக்க வேண்டும் என்றால் உங்கள் மதிப்பெண்கள் தான் கைகொடுக்கும். எனவே, பொதுத் தேர்வில் முழுகவனம் செலுத்துங்கள்.
வேலைவாய்ப்பு சார்ந்த போட்டித்தேர்வுகளை தமிழக அரசு நிறைய ஏற்படுத்தி தருகிறது. டி.என்.பி.எஸ்.சி., உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கும் மாணவியர் இப்போதிருந்தே தயாரானால், வேலைவாய்ப்புகள் பல உங்களுக்கு காத்திருக்கிறது.
இவ்வாறு, அவர் பேசினார்.
ஜெய்வாபாய், பழனியம்மாள் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவியர், ஊத்துக்குளி, குன்னத்துார், குமார்நகர், தெக்கலுார், கொடுவாய், அய்யங்காளிபாளையம் உள்ளிட்ட அரசு மேல்நிலைப்பள்ளி மாணவியர் பலர் கலைதிருவிழா போட்டிகளில் பங்கேற்று, தங்கள் கலைத்திறனை வெளிப்படுத்தினர்.
சதுரங்கம், வினாடி வினா போட்டி, பேச்சு, ஓவியம் உள்ளிட்ட, 12 வகைபோட்டிகள் நடத்தப்பட்டது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கல்லுாரி தாளாளர் அர்த்தனாரீஸ்வரன் பரிசு வழங்கி, பாராட்டினர்.
முன்னதாக, கல்லுாரி ஆடை வடிவமைப்புத்துறை மாணவியர் நடன நிகழ்ச்சி, பேஷன்ேஷா நடத்தப்பட்டது. கல்லுாரி கூட்டுறவுத் துறைத்தலைவர் நித்தியானந்தன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.