/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தென்னையை சேதப்படுத்திய யானைகள் கூட்டம்
/
தென்னையை சேதப்படுத்திய யானைகள் கூட்டம்
ADDED : ஜன 28, 2026 08:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை: உடுமலை அருகேயுள்ள, ஜல்லிபட்டி, லிங்கமாவூர் பகுதியில் தென்னை, மா மற்றும் பல்வேறு பயிர் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
வன எல்லையில் அமைந்துள்ள இப்பகுதியில், கடந்த சில நாட்களாக யானைக்கூட்டம் புகுந்து, நுாற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் இருந்த, தென்னை, மா, நெல்லி உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.
தொடர்ந்து, யானைகள் பயிர்களை அழித்து வருவதால், யானைக்கூட்டத்தை வனத்திற்குள் மீண்டும் விரட்ட வேண்டும், உரிய இழப்பீடு வழங்க வேண்டும், என விவசாயிகள் உடுமலை வனச்சரக அலுவலரிடம் மனு அளித்தனர்.

