/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
புதர் மண்டி காணப்படும் பெரிய குளம்; கரையை பலப்படுத்த எதிர்பார்ப்பு
/
புதர் மண்டி காணப்படும் பெரிய குளம்; கரையை பலப்படுத்த எதிர்பார்ப்பு
புதர் மண்டி காணப்படும் பெரிய குளம்; கரையை பலப்படுத்த எதிர்பார்ப்பு
புதர் மண்டி காணப்படும் பெரிய குளம்; கரையை பலப்படுத்த எதிர்பார்ப்பு
ADDED : அக் 02, 2025 12:08 AM

உடுமலை; உடுமலை பெரிய குளத்தின் கரைகளிலுள்ள புதர்களை அகற்றி, கரையை பலப்படுத்த வேண்டும்.
திருமூர்த்தி அணையிலிருந்து தளி கால்வாய் வாயிலாக நீர் வரத்துள்ள, ஏழு குளங்களில் ஒன்றான பெரிய குளம், 400 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
நேரடி பாசனம் மட்டுமின்றி, சுற்றுப்புறத்திலுள்ள விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளுக்கு நிலத்தடி நீர் மட்ட ஆதாரமாகவும் உள்ளது.
பெரிய குளத்தில், கரைகள் முறையாக பராமரிக்கப்படாத நிலையில், செடி, கொடிகள் முளைத்து, புதர் மண்டி காணப்படுகிறது.
இதனால், கரையை சுற்றி வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதோடு, நீர் கசிவு, மடைகள் திறப்பு, மடைகளில் ஏற்படும் அடைப்புகளை அகற்றுவதில் சிக்கல் நீடித்து வருகிறது. மேலும், கரைகளில் வளர்ந்துள்ள மரங்களால், கரைகள் விரிசல் விட்டுள்ளன.
மேலும், புதர் மண்டி காணப்படும் கரைகள் மது அருந்தும் மையமாகவும், சமூக விரோத செயல்கள் நடக்கும் பகுதியாக மாறியுள்ளது. எனவே, நீர் தேங்கும் உள் பரப்பின் கரையில் அமைந்துள்ள புதர்களை அகற்றி, சுற்றிலும் கரைகளை பலப்படுத்த வேண்டும். மேலும், கரையின் வெளிப்புற பகுதிகளும் பராமரிப்பு இல்லாமல், புதர் மண்டி காணப்படுகிறது.
எனவே, பெரிய குளம் கரை மற்றும் மதகுகளை புதுப்பிக்க, நீர் வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், பெரிய குளம் கரை பகுதிகள், கட்டட கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள், குப்பை, மீன், இறைச்சி கழிவுகள், திருமண மண்டப கழிவுகள் கொட்டும் மையமாக மாற்றப்பட்டுள்ளது.
இதனால், நீர் மாசடைவதோடு, சுகாதார கேடும், குளத்தில் வசிக்கும் உயிரினங்கள், விவசாயம் பாதிக்கும் அவல நிலை உள்ளது. எனவே, குளத்தை குப்பை கொட்டும் மையமாக மாற்றுவதையும் தடுக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.