/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கொழுமம் அருகே பெரிய அளவிலான கற்திட்டை; ஆவணப்படுத்திய வரலாற்று ஆய்வு நடுவம்
/
கொழுமம் அருகே பெரிய அளவிலான கற்திட்டை; ஆவணப்படுத்திய வரலாற்று ஆய்வு நடுவம்
கொழுமம் அருகே பெரிய அளவிலான கற்திட்டை; ஆவணப்படுத்திய வரலாற்று ஆய்வு நடுவம்
கொழுமம் அருகே பெரிய அளவிலான கற்திட்டை; ஆவணப்படுத்திய வரலாற்று ஆய்வு நடுவம்
ADDED : அக் 09, 2024 10:14 PM

உடுமலை : உடுமலை அருகே, கொழுமம் வனச்சரக பகுதியில், உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் நடத்திய கள ஆய்வில் பெரிய அளவிலான கற்திட்டை கண்டறியப்பட்டுள்ளது.
உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தை சேர்ந்த, அருட்செல்வன், சிவகுமார், பிரதீப் மற்றும் தொல்லியல் ஆய்வறிஞர் மூர்த்தீஸ்வரி ஆகியோர் கூறியதாவது:
மேற்கு தொடர்ச்சிமலைப்பகுதியில் அமைந்துள்ள, கொழுமம் வனப்பகுதிக்கு அருகே, குமணன் என்ற அரசர் ஆட்சி செய்ததால், குழுமம் எனப்பெயர் பெற்று, கொழுமம் என தற்போது, அந்த ஊரின் பெயர் திரிந்ததாக சங்க இலக்கியப்பாடல்கள், கல்வெட்டுசான்றுகள் வழியாக தெரிய வருகிறது.
மேலும், இப்பகுதியில், பெருஞ்சித்திரனார், பெருந்தலைச்சாத்தனார் என, இரண்டு புலவர்கள் வாழ்ந்ததால், இரட்டையர் பாடி என்று அழைக்கப்பட்டு, தற்போது, இரட்டையம்பாடி என்று திரிந்ததாக சான்றுகளும் கிடைத்துள்ளது.
இப்பகுதியில், ஏற்கனவே கல்வட்டங்களும், கற்திட்டைகளும் உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினரால் ஆய்வு செய்யப்பட்டு, ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், தொடர் ஆய்வு அடிப்படையில், மீண்டும் இப்பகுதியில், இரண்டு கல்வட்டங்களை கண்டறிந்து, ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த கற்திட்டை மிகப்பெரிய அளவில் காணப்பட்டதோடு, இதனை சுற்றிலும் ஏராளமான கல் வட்டங்கள் இருந்ததற்கான, வட்ட வடிவிலான பெருங்கற்கால கற்கள் இருந்தது.
கொழுமம் எனும் குழுமூருக்கு அருகில் இந்த முதிரை மலை இருப்பதும், இங்கு முதிரம் எனும் கொள்ளு விளைந்ததை உறுதிப்படுத்தும் வகையில், இன்றளவும், இப்பகுதிகளில் மானாவாரியாக கொள்ளு விவசாயம் செய்து வருவதையும், கள ஆய்வில் உறுதிப்படுத்தினோம்.
ஐவர் மலை பகுதி கல்வெட்டுகளில் குவணச்சேரி எனும் கல்வெட்டு இருப்பதும், ஐவர் மலையிலிருந்து இந்தப்பகுதி மிகவும் அருகமையில், மலையரண், காடரண் என்று மலைப்பாங்கான பகுதியாகவும், பெரியளவிலான கற்திட்டைகள், கல்வட்டங்கள் காணப்படுவதால், இங்கு பெருங்கற்காலத்திற்கு முன்பே, மக்கள் வசித்து வந்துள்ளதை உறுதிப்படுத்தலாம்.
இவ்வாறு, தெரிவித்தனர்.