sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 துன்பமில்லா வாழ்க்கை சாத்தியமாக வழி

/

 துன்பமில்லா வாழ்க்கை சாத்தியமாக வழி

 துன்பமில்லா வாழ்க்கை சாத்தியமாக வழி

 துன்பமில்லா வாழ்க்கை சாத்தியமாக வழி


ADDED : பிப் 23, 2026 05:44 AM

Google News

ADDED : பிப் 23, 2026 05:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அனுப்பர்பாளையம்: 'மனம் சமநிலைப்பட்டால் துன்பமில்லா வாழ்க்கை வாழலாம்' என்று உலக சமுதாய சேவா சங்கத் துணைத்தலைவர் தாமோதரன் பேசினார்.

திருப்பூர் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை 33வது ஆண்டு விழா மற்றும் சிங்காரவேலன் நகர் அறிவுத்திருக்கோவில் முதலாம் ஆண்டு விழா அங்கேரி பாளையம் கொங்கு கலையரங்கில் நடந்தது. ஆழியாறு அறிவுத்திருக்கோவில் அறங்காவலர் சுப்பிரமணியம், தலைமை வகித்தார். திருப்பூர் மண்டல துணை தலைவர் தர்மலிங்கம், கோபி மனவளக்கலை மன்ற அறக்கட்டளை தலைவர் நடராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருப்பூர் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை தலைவர் முரளி வரவேற்றார்.

உலக சமுதாய சேவா சங்க துணை தலைவர் தாமோதரன் பேசியதாவது:

உயர்ந்த பண்புகளை நினைக்கும்போது மனம் உயர்கிறது. தாழ்ந்த பண்புகளை நினைக்கும்போது தாழ்கிறது.

மனதில் உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படத்தான் மனவளக்கலை பயிற்சி. மனதை எப்போதும் சமநிலையில் இருக்கும்படி பார்த்து கொள்ள வேண்டும். வாழ்க்கையில் துன்பம் இல்லாமல் வாழ மனவளக்கலை பயிற்சி உதவுகிறது.

வாழ்க்கையில் நம்பிக்கை முக்கியமானது. அதை நாம் பெற வேண்டும். அந்த நம்பிக்கை என்பது நமக்குள்ளே உள்ளது. அதுபோல், வாழ்க்கை என்பது மனதிற்குள் உள்ளது. அதை வெளி கொண்டு வரவே இந்த பயிற்சியை பெற வேண்டும்.

இவ்வாறு, தாமோதரன் பேசினார்.

முன்னதாக, திருப்பூர் அறக்கட்டளை செயலாளர் பூபதி ராஜன், ஆண்டறிக்கை வாசித்தார். திருவண்ணாமலை மண்டல தலைவர் அருள் ஜோதி, வாழ்த்துரை வழங்கினார்.






      Dinamalar
      Follow us