/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சரணலாயத்தில் குறைந்த வெடிச்சத்தம்
/
சரணலாயத்தில் குறைந்த வெடிச்சத்தம்
ADDED : நவ 01, 2024 12:43 AM

திருப்பூர் : திருப்பூர், நஞ்சராயன் குளத்துக்கு, உள்நாட்டு பறவையினங்கள் மட்டுமின்றி ஐரோப்பா, ரஷ்யா, சைபீரியா, மங்கோலியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து சேன்ட் பைபர், கிரீன் ஹெரான், யூரேசியன் பார்பில், கிரேவாக் டெய்லர், டார்டர், ஸ்பூன்பில், கார்க்கினி, கூழைக்கிடா உள்ளிட்ட பல்வேறு பறவைகள் ஆண்டுதோறும் வலசை வருகின்றன.
அதிக உயரத்தில் பறக்கும் பட்டைத்தலை வாத்துகள், குளிர் காலத்தில் தங்களை தற்காத்துக் கொள்ள, இங்கு வலசை வருவது வழக்கம். இக்குளம் பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.
திருப்பூர் இயற்கை கழக தலைவர் ரவீந்திரன் கூறியதாவது:
பொதுவாகவே, குறிப்பிட்ட அளவுக்கு மேல் எழுப்பப்படும் சத்தம், மனிதர்களுக்கு மட்டுமின்றி, பறவைகளுக்கும் உகந்தது அல்ல. உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளின் அடையாளமாக, பல்லுயிர் சூழல் பெருக்கத்தின் ஒரு அங்கமாக வாழும் ஏராளமான பறவையினங்கள், நஞ்சராயன் குளத்துக்கு வந்து செல்கின்றன.
தீபாவளி சமயத்தில் வெடிக்கப்படும் பட்டாசு சத்தம், பறவைகளுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடும்; இதனால் அவை அங்கிருந்த பறந்து செல்லவோ, மீண்டும் வராமலே போகவும் கூட வாய்ப்புண்டு.
எனவே, சுற்றியுள்ள மக்கள் பறவைகளுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் பட்டாசு வெடிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வை ஆண்டுதோறும் ஏற்படுத்தி வருகிறோம்.
அப்பகுதியில் வசிக்கும் குடியிருப்புவாசிகளும் இதை நன்கு உணர்ந்து, விழிப்புணர்வுடன் செயல்படுகின்றனர்.

