/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'ஹார்ட்புல்னெஸ்' நடத்தும் தியான பயிற்சி முகாம்: அமைதிக்கு அச்சாரம்
/
'ஹார்ட்புல்னெஸ்' நடத்தும் தியான பயிற்சி முகாம்: அமைதிக்கு அச்சாரம்
'ஹார்ட்புல்னெஸ்' நடத்தும் தியான பயிற்சி முகாம்: அமைதிக்கு அச்சாரம்
'ஹார்ட்புல்னெஸ்' நடத்தும் தியான பயிற்சி முகாம்: அமைதிக்கு அச்சாரம்
ADDED : ஜன 03, 2024 12:42 AM
திருப்பூர்:தமிழகம் முழுவதும் 15 வயதுக்கு மேற்பட்ட ஆறு கோடி பேருக்கு தியானம் மற்றும் யோகா பயிற்சி அளிக்கும் வகையில் 'ஒன்றிணைவோம் வா' என்ற பெயரில் செயல்திட்டம் நடைபெற்று வருகிறது.
மத்திய அரசின் கலாசார துறையுடன் இணைந்து ஹார்ட்புல்னெஸ் அமைப்பு இதை மேற்கொண்டுள்ளது. இத்திட்டம் கடந்த அக்., மாதம் திருப்பூரில் துவங்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக வரும், 6 முதல் 8ம் தேதி வரை மூன்று நாள் இப்பயிற்சி வகுப்புகள் திருப்பூர் தெற்கு ரோட்டரி மண்டபத்தில் நடக்கிறது. அதேபோல், 7 முதல் 9ம் தேதி வரை ஊத்துக்குளி காமாட்சியம்மன் திருமண மண்டபம், கொடுவாய் வி.எஸ்.எஸ்., திருமண மண்டபம் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.
முற்றிலும் இலவசமாக இப்பயிற்சி அளிக்கப்படுகிறது. எளிய முறை யோகா, மூச்சுப் பயிற்சி மற்றும் மன நிறைவு தியானங்கள் பயிற்றுவிக்கப்படுகிறது. மாலை 5:30 முதல் 8:00 மணி வரை வகுப்புகள் நடைபெறும். இதில் 15 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கலாம். கூடுதல் விவரங்களுக்கு, 95002 00800 மற்றும் 98940 46200 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.