/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கலாசார வரலாற்றை பறைசாற்றிய நவீன ஆபரண ஓவிய கண்காட்சி
/
கலாசார வரலாற்றை பறைசாற்றிய நவீன ஆபரண ஓவிய கண்காட்சி
கலாசார வரலாற்றை பறைசாற்றிய நவீன ஆபரண ஓவிய கண்காட்சி
கலாசார வரலாற்றை பறைசாற்றிய நவீன ஆபரண ஓவிய கண்காட்சி
ADDED : பிப் 08, 2025 11:34 PM

இந்திய கலாசார வரலாற்றை பறைசாற்றும் வகையிலான, நவீன அணிகலன் ஓவிய கண்காட்சி, பார்வையாளர்களை கவரும் வகையில் அமைந்திருந்தது.
'நிப்ட்-டீ' கல்லுாரி மாணவர்களின், கலாசார மற்றும் வரலாற்று விழிப்புணர்வு கண்காட்சி நடந்தது. ஆடை வடிவமைப்பு மற்றும் பேஷன்துறை மாணவ, மாணவிகள், பண்டைய காலம் துவங்கி, நவீன காலம் வரையிலான, இந்திய ஆபரணங்கள் பயன்பாடு குறித்து ஓவிய வடிவில் காட்சிப்படுத்தினர்.
மவுரிய, குப்த, சோழர், விஜய நகரம் மற்றும் மொகலாய பேரரசுகளின் நகை வடிவங்கள், அதற்குபிறகு, ஐரோப்பிய தாக்கத்துடன் உருவான நவீன இந்திய நகை வடிவமைப்பு முறைகள் வரை, ஓவியமாக காட்சிப்படுத்தப்பட்டன.
ஒவ்வொரு ஓவியமும் அதன் காலத்திற்கேற்ப அழகிய வடிவங்கள், உலோக பயன்பாடு, கல் அணி வகைகள் மற்றும் கைவினைப் பணிகளின் நுட்பங்களை வெளிப்படுத்தும் வகையில் இருந்தது.
நிப்ட்-டீ கல்லுாரி முதல்வர் கோபாலகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர், ஓவியங்களை பார்வையிட்டனர். இந்திய ஆபரணங்கள் வெறும் அழகுக்காக மட்டும் உருவாக்கப்படவில்லை.
அவை ஒவ்வொரு சமூகவியல், மத மற்றும் கலாசார அடையாளங்களாகவும் விளங்குகின்றன. கண்காட்சி, ஆபரணங்கள் எப்படி காலத்திற்கேற்ப மாறி வந்தன என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்ததாக பாராட்டினர்.
மாணவர்களும், ஒவ்வொரு ஓவியத்திலும் புதுமை மற்றும் தனித்துவத்தை காட்சிப்படுத்தினர். பாரம்பரிய இந்திய ஆபரணங்களின் கலைநயம், பண்பாட்டு தாக்கம் மற்றும் காலத்திற்கேற்ப அவற்றின் மேம்பாட்டை விளக்கும் வகையில், அரிய வாய்ப்பாக அமைந்ததாக, கல்லுாரி மாணவர்கள் தெரிவித்தனர்.

