/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குடியிருப்பு பகுதியில் குரங்கார் ஜாலி உலா
/
குடியிருப்பு பகுதியில் குரங்கார் ஜாலி உலா
ADDED : ஜன 05, 2024 01:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்;காங்கயம் ரோட்டில், குடியிருப்பு பகுதிகளில் குரங்குகள் உலா வருகின்றன.
திருப்பூர், காங்கயம் ரோட்டில் மக்கள் அதிகம் கூடும் குடியிருப்பு பகுதிகள், வேலன் ஓட்டல் பின் என, சில குரங்குகள் நடமாட்டம் தென்படுகிறது. அவற்றால் இடையூறு ஏற்படும் என, மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
வனத்துறையினர் கூறுகையில், 'நீலகிரி மாவட்டம் மற்றும் வனங்கள் சூழ்ந்த பகுதியில் இருந்து லாரிகள் வாயிலாக குரங்குகள் வந்திருக்கலாம். அவை தாமாகவே சென்று விடும்; பொதுமக்கள், குரங்களுக்கு உணவு கொடுப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்,' என்றனர்.