/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மது அருந்தும் மையமாக மாறிய பூங்கா
/
மது அருந்தும் மையமாக மாறிய பூங்கா
ADDED : டிச 13, 2025 07:48 AM

உடுமலை: உடுமலையில், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் வந்து செல்லும் நகராட்சி பூங்கா மது அருந்தும் மையமாக மாறியுள்ளதால், கடும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
உடுமலை, பார்க் ரோட்டில், நகராட்சி அண்ணா பூங்கா உள்ளது. இதன் அருகில், உயர்நிலைப்பள்ளி, நடுநிலைப்பள்ளி மற்றும் அங்கன்வாடி மையம், போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி மையம், நகராட்சி சுகாதார ஆய்வாளர் அலுவலகம், உணவு பாதுகாப்பு துறை அலுவலகம் மற்றும் சந்தை அமைந்துள்ளது.
இந்த ரோட்டில், டாஸ்மாக் மதுக்கடை அமைந்துள்ளதால், கடைகளுக்கு வரும் வாகனங்கள், 'போதை'ஆசாமிகளால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
மேலும், பார்க்ரோடு, சந்தை ரோடு பகுதிகளில், திறந்த வெளிகளில் மது அருந்தும் மையமாக மாற்றப்பட்டுள்ளதோடு, காலி மது பாட்டில்கள், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் டம்ளர்கள், ரோடு மற்றும் பூங்கா பகுதியில் வீசப்படுகிறது.
மேலும், போதை ஆசாமிகள் தகராறில் ஈடுபடுவதோடு, திறந்த வெளி கழிப்பிடமாகவும் பயன்படுத்துகின்றனர்.
இதனால், பள்ளிக்குழந்தைகள், பூங்காவிற்கு வரும் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எனவே, டாஸ்மாக் மதுக்கடையை உடனடியாக மாற்ற வேண்டும்.

