/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பஸ் டிரைவரின் சாதுர்யத்தால் யானையிடம் தப்பிய பயணியர்
/
பஸ் டிரைவரின் சாதுர்யத்தால் யானையிடம் தப்பிய பயணியர்
பஸ் டிரைவரின் சாதுர்யத்தால் யானையிடம் தப்பிய பயணியர்
பஸ் டிரைவரின் சாதுர்யத்தால் யானையிடம் தப்பிய பயணியர்
ADDED : மார் 02, 2024 01:26 AM

உடுமலை,:திருப்பூர் மாவட்டம் உடுமலையிலிருந்து, கேரளா மாநிலம் மூணாறு செல்லும் வழித்தடம், வனப்பகுதியில் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு, 10:00க்கு, மூணாறிலிருந்து உடுமலை நோக்கி, தமிழக அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. பஸ்சை, உடுமலை சங்கர் நகரைச் சேர்ந்த வரதராஜன், 50, ஓட்டி வந்தார்.
பஸ்சிற்குள், 15 பயணியர் அமர்ந்திருந்தனர். நயமக்காடு பகுதியில் திடீரென வந்த அப்பகுதியில் சுற்றித்திரியும் 'படையப்பா' யானை பஸ்சை வழிமறித்து, தும்பிக்கையால் தாக்கியது.
முன் பக்க கண்ணாடியை உடைத்ததோடு, பஸ்சை மலைச்சரிவில் தள்ளி விட முயற்சித்தது. சுதாரித்த டிரைவர், ஹாரன் எழுப்பியும், விளக்குகளை அணைத்து, எரியவிட்டும், யானை எதிர்பார்க்காத நேரத்தில், பஸ்சை வேகமாக எடுத்துச்சென்று, பயணியரை காப்பாற்றினார்.
பருவ மழை பொய்த்ததால், வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுகிறது.
எனவே, அவற்றுக்கான குடிநீர் வசதியை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.

