தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ 'தாமதமாகும் கால்நடை இழப்பீடு நிரந்தர நிதி உருவாக்க வேண்டும்'

'தாமதமாகும் கால்நடை இழப்பீடு நிரந்தர நிதி உருவாக்க வேண்டும்'

'தாமதமாகும் கால்நடை இழப்பீடு நிரந்தர நிதி உருவாக்க வேண்டும்'


UPDATED : ஆக 05, 2026 11:27 PM

ADDED : ஆக 05, 2026 10:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 05, 2026 11:27 PM ADDED : ஆக 05, 2026 10:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்:''திருப்பூர் மாவட்டத்தில் தெருநாய்கள் தாக்கி ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு இழப்பீட்டை விரைவாக வழங்கும் வகையில், ஊராட்சி நிர்வாகங்கள் மூலம் நிரந்தர நிதி ஒதுக்க வேண்டும்'' என கால்நடை வளர்ப்போர், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வெள்ளகோவில், காங்கயம், தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித்திரியும் நாய்கள், விவசாயிகள் பட்டிகளில் அடைத்து வைத்துள்ள ஆடு, செம்மறியாடு உள்ளிட்ட கால்நடைகளை கூட்டமாக தாக்கி கொல்வது தொடர்கதையாகி வருகிறது. இதனால் கால்நடை வளர்ப்பையே நம்பியுள்ள விவசாயிகள் கடும் பொருளாதார இழப்பை சந்தித்து வருகின்றனர்.

விவசாயிகள் கூறியதாவது:

நாய்கள் தாக்கி கால்நடைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அரசின் இழப்பீட்டு திட்டம் இருந்தாலும், இரண்டாம் கட்ட நிதி பலருக்கு இன்னும் கிடைக்கவில்லை. நான்கு மாதங்களுக்கும் மேலாக இழப்பீடு தாமதமாக வழங்கப்படுவதால், புதிய கால்நடைகள் வாங்க முடியாமல் விவசாயிகள் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளனர்.

எனவே, தற்போதைய சந்தை விலையை அடிப்படையாகக் கொண்டு கால்நடைகளுக்கான இழப்பீட்டை மறுநிர்ணயம் செய்து உயர்த்த வேண்டும். மேலும், கால்நடை இறந்த 15 நாட்களுக்குள் இழப்பீடு கிடைக்கும் வகையில், ஊராட்சி நிர்வாகங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் தனி நிரந்தர நிதியை உருவாக்கி, விரைவாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us