/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கூட்டாற்றை கடக்க முயன்ற வர் உயிரிழப்பு
/
கூட்டாற்றை கடக்க முயன்ற வர் உயிரிழப்பு
ADDED : அக் 19, 2025 11:01 PM
உடுமலை: உடுமலை-சின்னாறு ரோட்டில் இருந்து அடர் வனப்பகுதியில் நடந்து, கூட்டாறு பகுதியை கடந்து, தங்கள் குடியிருப்புக்கு அப்பகுதி மக்கள் சென்று வருகின்றனர்.
நேற்று முன்தினம் இரவு, கேரள மாநிலம் மறையூர் சுற்றுப்பகுதிகளில் பெய்த மழையால், கூட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
அப்போது, தளிஞ்சி கிராமத்தை சேர்ந்த மாரியப்பன், 40; மது 38; இருவரும், கூட்டாற்றை பரிசலில் கடக்க முயற்சி செய்துள்ளனர். ஆற்றில் நிலவிய வெள்ளப்பெருக்கால், பரிசல் கவிழ்ந்து, இருவரும் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டனர்.
இதில், மது, அங்கிருந்த மரத்தை பிடித்து உயிர் தப்பியுள்ளார்; மாரியப்பனை காணவில்லை. அவர் கொடுத்த தகவலின்படி, வனத்துறையினர், உடுமலை தீயணைப்பு மீட்பு நிலையத்தினர் சம்பவ இடத்துக்குச்சென்று, மாரியப்பனை தேடும் பணியில் நேற்று காலை ஈடுபட்டனர். நேற்று மதியம், மாரியப்பன் உடல், ஆற்றோரத்தில் மீட்கப்பட்டது.
அமராவதிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.