/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஒரு மாத்திரை ரூ.80... 7 மணி நேரம் போதை! மருந்துக்கடைக்கு சீல்
/
ஒரு மாத்திரை ரூ.80... 7 மணி நேரம் போதை! மருந்துக்கடைக்கு சீல்
ஒரு மாத்திரை ரூ.80... 7 மணி நேரம் போதை! மருந்துக்கடைக்கு சீல்
ஒரு மாத்திரை ரூ.80... 7 மணி நேரம் போதை! மருந்துக்கடைக்கு சீல்
ADDED : ஜன 28, 2024 11:48 PM
அனுப்பர்பாளையம்;ஒரு மாத்திரை 80 ரூபாய்... 7 மணி நேரம் போதை தரக்கூடியது. இந்த மாத்திரையை விற்ற, மருந்துக்கடைக்கு அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.
திருமுருகன்பூண்டி போலீசார் நேற்று சேலம் -- கோவை ரோடு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்திடமளிக்கும் வகையில் பைக்கில் வந்த இருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், அவர்கள் திருப்பூர் உம்மன் செட்டிபாளையம் சின்னசாமி தோட்டத்தை சேர்ந்த சஜின், 25, மேற்கு வங்க மாநிலம் ஜல்பாய்குரியை சேர்ந்த பசுதேவ் துாரல், 26, என்பதும், அவர்கள் போதையில் இருப்பதும் தெரியவந்தது.
அவர்கள் திருப்பூர் அம்மா பாளையத்தில் உள்ள ஒரு மருந்துக்கடையில் இருந்து போதை மாத்திரை வாங்கி பயன்படுத்தியது தெரிய வந்தது.
இதனையடுத்து, போலீசார் மருந்துக்கடை நடத்தி வரும் அனுப்பர்பாளையம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த ஹரிஹரன், 33, என்பவரை கைது செய்தனர்.
முறையான அனுமதியின்றி 11 அட்டை பெட்டிகளில் இருந்த 240 மாத்திரைகளை கைப்பற்றினர். ஒரு மாத்திரை 80 ரூபாய்க்கு விற்பனை செய்ததும், ஒரு மாத்திரை 7 மணி நேரம் போதை தருவதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
மருந்துக்கடைக்கு அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.