/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குழாய் பதிக்க தோண்டிய குழி: 6 மாதமாக மூடாத அவலம்
/
குழாய் பதிக்க தோண்டிய குழி: 6 மாதமாக மூடாத அவலம்
ADDED : ஜன 29, 2025 12:08 AM

திருப்பூர்; தென்னம்பாளையத்தில் குறுகலாக உள்ளதெருவில் குழாய் பதிக்க தோண்டிய குழியை முறையாக மூடாமல் மாதக்கணக்கில் பெரும் அவதி நிலவுகிறது.
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட, 52வது வார்டு தென்னம்பாளையத்தில், பள்ளிக்கூட வீதியிலிருந்து பிரிந்து செல்லும் கோவில் வீதி உள்ளது. இந்த பாதை மிகவும் குறுகலான பாதை.
இப்பகுதியில் கடந்தாண்டு பாதாள சாக்கடை திட்டத்தில் குழாய் பதிக்கும் பணி நடந்தது. இதற்காக பெரிய அளவில் குழி தோண்டி, குழாய் பதிக்கப்பட்டது. அதன் பின்னர் இந்த குழியை முறையாக மூடாமல் வெறுமனே மண்ணைக் கொட்டிச் சென்று விட்டனர்.
இதனால், அப்பாதை வழியாக வாகனங்கள், பாதசாரிகள் செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. இது குறித்து கடந்த செப்., மாதம் தினமலர் நாளிதழில் சுட்டிக் காட்டி படத்துடன் செய்தி வெளியானது.
இது வரை இந்த குழியை சரி செய்து ரோடு அமைக்க எந்த நடவடிக்கையும் இல்லை. இதனையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் கம்யூ., கட்சியினர் 'தினமலர்' செய்தியுடன் இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அப்பகுதியில் பேனர் அமைத்துள்ளனர்.
மாநகராட்சி அதிகாரிகள் இப்பிரச்னையில் விரைந்து நடவடிக்கை எடுத்து பாதையை சீரமைக்க வேண்டும்.

