/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இனிக்கும் படகு சவாரி ஆண்டிபாளையம் குளம் தயார் :சுற்றுலா பயணிகளை ஈர்க்கும்
/
இனிக்கும் படகு சவாரி ஆண்டிபாளையம் குளம் தயார் :சுற்றுலா பயணிகளை ஈர்க்கும்
இனிக்கும் படகு சவாரி ஆண்டிபாளையம் குளம் தயார் :சுற்றுலா பயணிகளை ஈர்க்கும்
இனிக்கும் படகு சவாரி ஆண்டிபாளையம் குளம் தயார் :சுற்றுலா பயணிகளை ஈர்க்கும்
ADDED : பிப் 17, 2024 01:31 AM
திருப்பூர்;'ஆண்டிபாளையம் குளத்தில் விரைவில் படகு சவாரி துவங்கும்' என, சுற்றுலா தொழில் முனைவோர் ஆய்வுக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்ட சுற்றுலா வளர்ச்சி மற்றும் சுற்றுலா தொழில் முனைவோர் ஆய்வுக்கூட்டம் நடந்தது. மாவட்ட சுற்றுலா அலுவலர் அரவிந்த்குமார் வரவேற்றார்; மாவட்ட சுற்றுலா துறையின் செயல்பாடு, சுற்றுலா தலங்களில் மேற் கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சிப்பணிகள், சுற்றுலா சார்ந்த தொழில் முனைவோருக்கு, சுற்றுலாத்துறை சார்பில் வழங்கப்படும் மானியம் மற்றும் கடன், சுற்றுலா துறையின் புதிய வழிகாட்டு நெறிமுறை, சுற்றுலா கிளப் குறித்து தெரிவிக்கப்பட்டது.
கலெக்டர் கிறிஸ்துராஜ், மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களின் நிலை குறித்து, துறை வாரியாக ஆய்வு செய்தார்.
''நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அமராவதி அணையில், சுற்றுலா துறைக்கு விரைந்து தடையின்மை சான்று வழங்க வேண்டும். திருமூர்த்தி அணைப் பகுதி யில், சுற்றுலா துறை அல்லது நீர்வளத்துறை சார்பில் பூங்கா அமைக்கும் திட்டத்தை வேகப்படுத்த வேண்டும்'' என, அறிவுறுத்தினார்.
திருப்பூர், சாமளாபுரம் குளத்தில் படகு இல்லம் அமைப்பது தொடர்பான சாத்தியக்கூறு தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளுமாறு, நீர்வளத்துறை மற்றும் சுற்றுலா துறையினருக்கு அறிவுரை வழங்கினார். ஆண்டிபாளையம் குளத்தில் படகு இல்லம் அமைக்கும் பணி தொடர்பாக கேட்டறிந்தார்.
''படகு இல்லம் அமைக்கும் பணி, 95 சதவீதம் நிறைவு பெற்று விட்டது. படகு வாங்குவதற்குரிய பணிகள் நடந்து வருகின்றன. விரைவில், சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்கு, படகு இல்லம் திறக்கப்படும்'' என, மாவட்ட சுற்றுலா அலுவலர் அரவிந்த்குமார் தெரிவித்தார்.
''இம்மாத இறுதிக்குள், இப்பணிகளை முடித்து, சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டுக்கு திறந்து விட தேவையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்'' என, கலெக்டர் அறிவுறுத்தினார்.திருப்பூர் சுற்றுலா மேம்பாட்டுக் குழு சங்க தலைவர் பூபதி பேசுகையில், ''அமராவதி அணை சுற்றுலா தளத்தை மேம்படுத்த வேண்டும்'' என்றார். திருப்பூர் மாவட்ட சுற்றுலா வளர்ச்சிக்குழு சங்க தலைவர் நாகராஜ், பேசினார்.