/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வரவேற்பு பெற்ற சோலார் பேனல் திட்டம்: ஒத்துழைக்காத 'மொபைல் ஆப்'கள்
/
வரவேற்பு பெற்ற சோலார் பேனல் திட்டம்: ஒத்துழைக்காத 'மொபைல் ஆப்'கள்
வரவேற்பு பெற்ற சோலார் பேனல் திட்டம்: ஒத்துழைக்காத 'மொபைல் ஆப்'கள்
வரவேற்பு பெற்ற சோலார் பேனல் திட்டம்: ஒத்துழைக்காத 'மொபைல் ஆப்'கள்
ADDED : மார் 08, 2024 12:10 PM
உடுமலை:வீடுகளில் சோலர் பேனல் பொருத்தி மின் இணைப்பு பெறும் திட்டம், மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ள நிலையில், விண்ணப்பிக்க அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இணைய தளம் மற்றும் 'மொபைல் ஆப்' சரிவர செயல்படுவதில்லை என்ற புகார் எழுந்துள்ளது.
மத்திய அரசின் திட்டப்படி, குடியிருப்புகளில், ஒரு கிலோவாட் முதல் 2 கிலோவாட் திறன் கொண்ட சோலார் பேனல் பொருத்த, 30 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்பட உள்ளது.
2 கிலோ வாட் முதல், 3 கிலோ வாட் வரை, 60 ஆயிரம் ரூபாய்; 3 கிலோ வாட்க்கு மேல், 78 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்பட இருக்கிறது.
இத்திட்டத்தின் வாயிலாக, மின்கட்டண சுமையில் இருந்து தப்பிக்க முடியும்; ஒரு கிலோ வாட் சோலார் பேனல் வாயிலாக, ஒரு நாளில், 4 முதல், 5 யூனிட் வரை மின் உற்பத்தி செய்ய முடியும் எனவும் மத்திய அரசு அறிவித்திருக்கிறது.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற, pmsuryaghar, QRT PM surya Ghar என்ற மொபைல் ஆப்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அந்த மொபைல் ஆப் வழியாக விண்ணப்பிக்கும் போது, தேர்வு செய்யும் கிலோ வாட் குறிப்பிட வேண்டும்.
மேலும், சோலார் பேனல் வினியோகிக்கும் நிறுவனங்களின், அவை நிர்ணயித்துள்ள விலை உள்ளிட்ட விபரங்களும் இடம் பெற்றுள்ளன.
இதுதவிர, கடன் வழங்கவுள்ள நிறுவனங்களின் விபரமும் அதில் இடம் பெற்றுள்ளன. ஆக, மிக எளிதாக அந்த மொபைல் ஆப் வாயிலாக, விண்ணப்பித்து கொள்ள முடியும் என, மின்வாரியத்தினர் அறிவிக்கின்றனர்.
ஆனால்,'இந்த மொபைல் ஆப்கள், சரிவர செயல்படுவதில்லை. விபரங்களுக்குள் செல்வதே சிரமமாக உள்ளது என, மின் நுகர்வோர் கூறிவருகின்றனர்.

