/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கடித்து குதறிய வெறி நாய்; 4 முதியவர்கள் படுகாயம்
/
கடித்து குதறிய வெறி நாய்; 4 முதியவர்கள் படுகாயம்
ADDED : செப் 20, 2024 05:57 AM
பல்லடம் : பல்லடம் பி.டி.ஓ., காலனியில், வெறி நாய் ஒன்று வயதான பெண் ஒருவர் உட்பட, 4 முதியவர்களை விரட்டி விரட்டி கடித்தது.
இப்பகுதியை சேர்ந்த பத்ரம்மாள் 65, ராமர் 65, கள்ளிப்பாளையத்தைச் சேர்ந்த ஸ்ரீரங்கன் 65 மற்றும் மாதப்பூரை சேர்ந்த முருகசாமி 67 ஆகிய நான்கு பேரின் கால்களையும் வெறிநாய் ஒன்று பதம் பார்த்தது. படுகாயம் அடைந்த நான்கு பேரும் பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பொதுமக்கள் கூறியதாவது: சமீப நாட்களாக இப்பகுதியில் கூட்டம் கூட்டமாக தெரு நாய்கள் சுற்றித்திரிகின்றன. ஒன்றோடு ஒன்று சண்டையிட்டுக் கொள்வதும், இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்களை விரட்டி அச்சுறுத்துவதுமான செயல்களில் ஈடுபடுகின்றன. குடியிருப்புகள் நிறைந்த இப்பகுதியில், அரசுப் பள்ளி கல்லுாரிகள் உள்ளன.
ஏராளமான மாணவ, மாணவியர் இந்த வழியாக வந்து செல்கின்றனர். தெரு நாய்களால் பள்ளி குழந்தைகளுக்கும் ஆபத்து உள்ளது. தெரு நாய் ஒன்று வயதானவர்கள் நான்கு பேரை கடித்து குதறியதால் அவர்கள் மிகவும் மன உளைச்சல் அடைந்துள்ளனர். எனவே, தெரு நாய்களை கட்டுப்படுத்தவும், பிடித்து செல்லவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.