/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கிராமத்தில் உலா வந்த அரிய வகை தேவாங்கு
/
கிராமத்தில் உலா வந்த அரிய வகை தேவாங்கு
ADDED : அக் 08, 2024 12:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை : உடுமலை அருகே, கிராமத்திற்குள் சுற்றி வந்த அரிய வகை தேவாங்கை, வனத்துறையினர் மீட்டு காப்புக்காடு பகுதியில் விடுவித்தனர்.
மடத்துக்குளம் அருகேயுள்ள கடத்துார், அர்ச்சுனேஸ்வரர் கோவில் பகுதியில், ஒரு வயது மதிக்கத்தக்க அரிய வகை தேவாங்கு, மரத்திலிருந்து கீழிறங்கி வந்து, சுற்றி வந்துள்ளது.
இதனை பார்த்த கிராம மக்கள், அதனை மீட்டு, அமராவதி வனவர் செந்தில் முருகன் வசம் ஒப்படைத்தனர். இதனை தொடர்ந்து, அமராவதி வனச்சரகம், கொம்பு பீட் காப்பு காடு பகுதியில் விடுவிக்கப்பட்டது.