/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கானல் நீராகும் கோரிக்கை... விரக்தியில் விசைத்தறியாளர்கள்! எதிர்பார்ப்பு நிறைவேறுவது எப்போது?
/
கானல் நீராகும் கோரிக்கை... விரக்தியில் விசைத்தறியாளர்கள்! எதிர்பார்ப்பு நிறைவேறுவது எப்போது?
கானல் நீராகும் கோரிக்கை... விரக்தியில் விசைத்தறியாளர்கள்! எதிர்பார்ப்பு நிறைவேறுவது எப்போது?
கானல் நீராகும் கோரிக்கை... விரக்தியில் விசைத்தறியாளர்கள்! எதிர்பார்ப்பு நிறைவேறுவது எப்போது?
ADDED : ஜன 19, 2025 12:28 AM

பல்லடம்: கானல் நீராக உள்ள கோரிக்கைகள் நிறைவேறுமா? என, விசைத்தறி உரிமையாளர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
இது குறித்து, விசைத்தறி சங்க கூட்டமைப்பின் செயலாளர் வேலுசாமி கூறியதாவது:
விவசாயத்துக்கு அடுத்ததாக, 25 லட்சம் விசைத்தறிகள் மூலம் ஜவுளி உற்பத்தி தொழிலில்
இரண்டாவது பெரிய மாநிலமாக தமிழகம் உள்ளது.
தானியங்கி தறிகளின் வருகையால், விசைத்தறி தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. உக்ரைன்- ரஷ்யா போர் ஏற்பட்டதை தொடர்ந்து, சேர்க்கை இழை பஞ்சு மற்றும் நுால்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால், நமது நாட்டின் ஏற்றுமதி பாதிக்கப்பட்டு, விசைத்தறி தொழில் பின்னடைவை சந்தித்து வருகிறது.
மத்திய அரசிடம் எதிர்பார்ப்பு
விசைத்தறி மேம்பாட்டுக்கான பவர் டெக்ஸ் இந்தியா திட்டம் இன்று வரை செயல்படுத்தப்படாமல் உள்ளது. 2021ம் ஆண்டு முதல் ஜவுளித்துறைக்கு என நிதி ஒதுக்காமல், எம்.எஸ்.எம்.இ., மூலம் நிதியை பெற்றுக் கொள்ள அறிவுறுத்தியதால், விசைத்தறி தொழில் பின்னடைவை சந்தித்தது.
கடந்த, 2014ம் ஆண்டு முதல் விசைத்தறிகளுக்கு தனியாக ஒதுக்கீடு செய்து தர வலியுறுத்தி வருகிறோம். ஒவ்வொரு பார்லிமென்ட் கூட்டத் தொடரின் போதும் இதனை எதிர்பார்த்து ஏமாற்றமே மிஞ்சுகிறது.
மாநில அரசின் பங்கு?
தமிழகத்தை பொறுத்தவரை ஜவுளித்துறையில் அரசின் பங்கு குறைவாகவே உள்ளது. இந்தியாவில், காடா துணி உற்பத்தியில், 2வது மாநிலமாக தமிழகம் உள்ளபோதும், துணியை மதிப்புக்கூட்டி மேம்படுத்துவதற்கான பிராஸசிங், சாயமிடுதல், பிரின்டிங் உள்ளிட்ட வசதிகள் கிடைக்காமல், மதிப்பு கூட்டுவதற்காக வடமாநிலங்களை நோக்கிச் செல்வதாலும், விசைத்தறி தொழில் மேம்படாமல் உள்ளது.
சாயமிட்ட துணிகளை உற்பத்தி செய்யத் தேவைப்படும் மூலப் பொருட்கள் அனைத்தும் வட மாநிலங்களில் இருந்து தருவிக்கப்படுவதால், உற்பத்தி செலவு நமக்கு அதிகரிக்கிறது.
இதனால், அண்டை மாநிலங்களுடன் போட்டி போட முடியாத நிலை உள்ளது. அரசு பள்ளி சீருடைகள் விசைத்தறியில் உற்பத்தி செய்யப்படும் என்ற தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படாமல் உள்ளது.
இதேபோல், அரசுத்துறை சார்ந்த பணியாளர்களின் சீருடைகளும் விசைத்தறிகளில் உற்பத்தி செய்யப்படும் என, முதல்வர் ஸ்டாலின் கடந்த, 2023ல் அறிவித்ததும் கிடப்பில் உள்ளது.
கடந்த இரண்டு ஆண்டாக தயாரிக்கப்பட்டு வரும் ஜவுளி கொள்கையில், விசைத்தறிகளை மேம்படுத்தவும், சோலார் அமைக்கவும், 50 சதவீத மானியம் வழங்க வேண்டும்.
கைத்தறி துறையுடன் விசைத்தறி உள்ளதால், நீ மனசு திட்டங்களை பெறுவதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே விசைத்தறிகளை துணிநுால் துறையில் இணைக்க வேண்டும்.
இவ்வாறு, மத்திய மற்றும் மாநில அரசுகள் செயல்படுத்த வேண்டிய பல திட்டங்கள் கானல் நீராக கிடப்பில் உள்ளதால், விசைத்தறி தொழில் மேம்படாமலும், விசைத்தறியாளர்கள் மற்றும் இதை நம்பியுள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மேம்படாமலும் உள்ளது.
இனி வரும் நாட்களில், விசைத்தறி ஜவுளி உற்பத்தி தொழில் மீது மத்திய, மாநில அரசுகள் கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.