sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சாலை விபத்தில்லா தீபாவளி விதி மீறாத மதி அவசியம்

/

சாலை விபத்தில்லா தீபாவளி விதி மீறாத மதி அவசியம்

சாலை விபத்தில்லா தீபாவளி விதி மீறாத மதி அவசியம்

சாலை விபத்தில்லா தீபாவளி விதி மீறாத மதி அவசியம்


ADDED : அக் 21, 2024 03:47 AM

Google News

ADDED : அக் 21, 2024 03:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தீபாவளி பண்டிகை உற்சாகம், மக்களிடம் தொற்றிக் கொள்ள துவங்கிவிட்டது. சாலைகளில் வாகன போக்குவரத்தும், நெரிசலும் அதிகரிப்பது இயல்பு. 'விபத்தில்லா பயணம் என்பதில் மக்கள் கவனம் செலுத்த வேண்டும்' என்கின்றனர் போலீசார்.

''டூவீலர் விபத்தில் மரணம் நிகழ்வதற்கு, ெஹல்மெட் அணியாதது தான், 90 சதவீதம் காரணமாக அமைந்துவிடுகிறது'' என்கிறார், கே.வி.ஆர்., நகர் போலீஸ் உதவி கமிஷனர் நாகராஜன். திருப்பூர் குமரன் கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், 'சாலை விதிகளை மதிக்காமல் வாகனம் ஓட்டுவது தான், விபத்துக்கு முக்கிய காரணமாகிவிடுகிறது'' என்கிறார்.

'திக்...திக்...' கள நிலவரம்


அவிநாசி ரோடு, பல்லடம் ரோடு, காங்கயம் ரோடு, தாராபுரம் ரோடு, பி.என்., ரோடு ஆகிய பிரதான சாலையில், 24 மணி நேரமும் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும்.

அதிலும், 'பீக் ஹவர்ஸ்' எனப்படும், காலை மற்றும் மாலை நேரங்களில் டூவீலர், கார் உள்ளிட்ட தனியார் வாகனங்கள், அரசு மற்றும் தனியார் பஸ்கள், சரக்கு வாகனங்கள் என, நுாற்றுக்கணக்கான வாகனங்கள் ஒரே நேரத்தில் பயணிப்பதால், சாலை படுபிஸியாக இருக்கும்.

அவிநாசி ரோடு, காங்கயம் ரோடு ஆகியவை ஏற்கனவே, குறுகலானதாக, ஆங்காங்கே வாகனநெரிசல் ஏற்படும் வகையில் தான் இருக்கிறது. டூவீலர் ஓட்டிகள் முதற்கொண்டு அனைத்து வாகன ஓட்டிகளும், வேகமாகவே சென்று பழக்கப்பட்டுவிட்ட நிலையில், அவர்களை முந்திச் செல்லும் வேகத்தில் அரசு, தனியார் பஸ் டிரைவர்கள் செயல்படுகின்றனர்.

அதிலும், முன்செல்லும் டூவீலர் உள்ளிட்ட வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்ப, அவர்கள் எரிச்சலடையும் வகையிலும், அதிக சப்தத்துடன் கூடிய 'ஏர் ஹாரன்' பயன்படுத்துகின்றனர். பிரதான சாலைகள் அனைத்தும் ஒரே சீராக இருப்பதில்லை; ரோட்டின் நடுவிலும், ஓரங்களிலும் ஆங்காங்கே சிறு, சிறு குழிகள் உள்ள நிலையில், அரசு, தனியார் பஸ்களுக்கு இடம் கொடுக்க ஒதுங்கும் போது, குழிகளில் சிக்கி தடுமாறும் நிலையையும் ஆங்காங்கே பார்க்க முடிகிறது.

இந்த சாலைகளில் பயணிக்கும் தனியார், அரசு பஸ் ஓட்டுநர்கள், நான்கு வழிச் சாலையில் பயணிப்பதை போன்று உணர்வுடன் அசுர வேகத்தில் பயணிக்கின்றனர்; இதுவும், விபத்துக்கும் வழி வகுக்கிறது.அதே போன்று, டூவீலர் ஓட்டிகள் கூட சாலை விதிகளை பின்பற்றுவதில்லை. களத்தில் கண்காணித்து, சாலை விதி மீறுவோர் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே விபத்து குறையும்.






      Dinamalar
      Follow us